»   »  சாட்டை - 2... இந்த முறை சமுத்திரகனிக்கு பதில் கிஷோர்!

சாட்டை - 2... இந்த முறை சமுத்திரகனிக்கு பதில் கிஷோர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பதற்கு உண்மையான தொடர்ச்சியுடன் வெளிவந்த படம் சிங்கம் 2 மட்டும்தான்.

இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொண்டு வந்த எந்தப் படமும் அப்படி ஒரு தொடர்ச்சியுடன் வெளிவந்ததில்லை.

Kishore steps in Sattai sequel

இரண்டாம் பாகம் என்று சொல்வார்கள். ஆனால் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் தொடர்பே இருக்காது.

இப்போது சாட்டை படத்துக்கு ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார்களாம். இந்தப் படமாவது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? தெரியவில்லை.

சாட்டையைத் தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். தற்போது பரத் - நமீதா நடிப்பில் வடிவுடையான் இயக்கத்தில், அம்ரீஷ் இசையில் 'பொட்டு' படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

'சாட்டை - 2' படத்தில் கிஷோர் மற்றும் தம்பி ராமைய்யா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்த கெளதம் இந்த படத்தை இயக்குகிறார்.

சாட்டையில் சமுத்திரகனி நல்ல ஆசிரியராக நடித்திருந்தார். க்ளைமாக்ஸில் அவர் வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்வார். அவருக்கு பதில் அந்த வேடத்தில் இப்போது கிஷோர் நடிக்கிறாராம்.

English summary
Actor Kishore is playing key role in the sequel of Sattai movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos