twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாத்ரீகனுக்காக தலையை மழித்து, காவி உடை அணிந்த கிஷோர்!

    By Shankar
    |

    உலகமே நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல வாழ்க்கையே ஒரு பயணம் என்பார் கண்ணதாசன்.

    'யாத்ரீகன்' என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள், நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. விடை தேடி அவனை அலைக்கழிக்கின்றன.

    Kishore tonsures head for Yathreegan

    இப்படி ஆதி தன் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தேடி பல இடங்களுக்கு பயணம் செய்கிறான். சில நேரம் சூழலே அவனை இழுத்துச் செல்கிறது. அலைகிறான்; திரிகிறான்.. முடிவு என்ன?

    'யாத்ரீகன்'. இது 10 வயது முதல் 45 வயது வரை ஒரு மனிதனின் பயணக்கதை .

    இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்.

    ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு பிடித்துப்போய் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். கிஷோருடன் சாயாசிங், 'டூரிங் டாக்கீஸ்' சுனுலட்சுமி, 'கடல்' சரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இதற்கான படப்பிடிப்புக்காக படக்குழுவினர் நேபாளம், காங்க்டாக் ,சிலிகுரி, டார்ஜிலிங், வாரணாசி, ,காலிம்பான் போன்ற இடங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.

    இன்னமும் ஆறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றார் இயக்குனர் ஜெயபால்.

    நேபாளத்தில் ஒரு புத்த மடாலயத்துக்கு சென்று இது தொடர்பாக பேசவிரும்பிய போது அதன் உள்ளே நுழைய வேண்டும் என்றால்கூட தலை மழித்து அவர்களுடைய உடையை அணிந்து வந்தால்தான் அனுமதி என்று கூறியுள்ளனர்.

    கிஷோர் அதற்காக தலையை மழித்துக் கொண்டு உள்ளே சென்று அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி செய்து விட்டுத்தான் மதத் தலைவரைப் பார்த்துள்ளனர்.

    புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி இவற்றுக்குப் பொருள்கள் பலவாறு கூறப்பட்டாலும் அது நமது பௌதீக வாழ்க்கையில் எப்படிப் பரிணாமப்படுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையான விளக்கத்தை கேட்டுப் பெற்றுள்ளனர்.

    புத்த பூர்ணிமா தினத்தன்று படப்பிடிப்பு நடத்தி ஆயிரக்கணக்கான புத்தபிட்சுகள் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலத்தையும் பதிவு செய்து வந்துள்ளனர்.

    ''நாயகனின் கேள்விகளுக்கு விடை தேடும் 'யாத்ரீகன்' திரையில் ஒரு பயண அனுபவமாக இருக்கும்'' என்கிறார் இயக்குநர் ஜெயபால் கந்தசாமி.

    ஒளிப்பதிவு வி.வெங்கடேஷ். இவர் ஜீவாவின் மாணவர். 'மூச்சு' படத்துக்குப் பிறகு இது இவருக்கு 2 வதுபடம்.

    இசை ஜி.ரங்கராஜ். சென்னையில் இசைப்பள்ளி நடத்தி வருகிற இவருக்கு கர்நாடக சங்கீத உலகத்தில் குறிப்பிட்ட இடம் உள்ளது.

    நாக் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பவர் சோமசேகர ரெட்டி. இவர் பழம்பெரும் தெலுங்கு தயாரிப்பாளர் நாகேஸ்வர ரெட்டியின் மகன்.

    ''படக்கதை ரசிகர்களுக்கு, தங்கள் கதையாக உணர வைக்கும். நாயகன், அவன் சந்திக்கும் மனிதர்கள், சம்பவங்கள் சுவாரஸ்யத்தின் தோரணங்களாக ரசிக்க வைக்கும். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். இவை பார்க்கும் ஒவ்வொருவரையும் கதைஉடன் தொடர்பு படுத்தி மகிழவும் நெகிழவும் வைக்கும்,'' என்கிறார் இயக்குநர்.

    English summary
    Yathreegan, a new movie starring Kishore in lead, is the story of a man who starts his journey at the age of 10 and ends at 45 years. Story, Screenplay, Dialogue and Direction is done by Jayapal Kandasamy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X