» 

பொங்கல் படங்கள்.. வசூலில் முதலிடம் பிடித்த 'லட்டு'!

Posted by:

பொங்கல் ரிலீஸ் படங்களில் சந்தானம் - சீனிவாசன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வசூலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பொங்கலுக்கு அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, சமர், புத்தகம், விஜயநகரம் ஆகிய 5 படங்கள் வெளியாகின.

இவற்றில் தரத்தில் சமர் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வசூலும் ஓகே ரகம்தான்.

லட்டுக்கு பெரிய வசூல்..

பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை சுட்டு எடுக்கப்பட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. பொங்கல் சீஸனின் முதல் 5 நாள் முடிவில் இந்தப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 7 கோடியை வசூலித்துள்ளது.

வார இறுதி மீண்டும் வந்துவிட்டதால், மேலும் வசூல் குவியும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. மேலும் பெரிய அரங்குகளுக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது இந்தப் படம்.

 

 

சமர்

விஷாலின் சமர் படத்துக்கு நல்ல விமர்சனங்கள், தரமான படமாக்கம் என்ற பாராட்டுகள் குவிகின்றன. வசூலும்கூட பரவாயில்லை. முதல் வார முடிவில் இந்தப்படம் ரூ 6 கோடிவரை வசூலித்துள்ளது. படத்துக்கு கிடைத்துள்ள பாஸிடிவ் விமர்சனங்கள் மேலும் பார்வையாளர்களைச் சேர்க்கும் என நம்புகிறார்கள்.

அலெக்ஸ் பாண்டியன்

மிகப் பிரமாண்டமான ஓபனிங்கைப் பெற்ற அலெக்ஸ் பாண்டியன் படம், மோசமான மசாலா என்ற விமர்சனத்தைப் பெற்று, டமாலென விழுந்துவிட்டது. ஆனாலும் முதல் வார வசூலைப் பொறுத்தவரை மற்ற படங்களின் மொத்த வசூலை தூக்கி சாப்பிட்டுவிட்டது அலெக்ஸ் பாண்டியன். இது அடுத்த வாரம் தொடருமா என்பதுதான் கேள்விக்குறி.

புத்தகம்

விஜய் ஆதிராஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமான புத்தகம், ரிலீசாகியிருப்பதே பி சென்டர்களில் பலருக்கு தெரியவில்லை.

See next photo feature article

விஜயநகரம்

மதிப்பெண் மோசடி எனும் முக்கியப் பிரச்சினையைக் கையிலெடுத்த படம் விஜயநகரம். ஆனால் அமெச்சூர்த்தனமான படமாக்கம்தான் பிரச்சினை.

இந்த இரு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகியிருப்பதைப் பதிவு செய்துள்ளன. அவ்வளவுதான்.

 

Read more about: kanna laddu thinna aasaiya, pongal releases, samar, சமர், பொங்கல் ரிலீஸ், கண்ணா லட்டு தின்ன ஆசையா
English summary
Kanna Laddu Thinna Aasiya has got the top place among Pongal Releases and Vishal's Samar is emerging to got the same in coming days.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos