twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வழக்கம்போல இணையத்தில் கோச்சடையான்: போலீசில் புகார்.. 10000 திருட்டு டிவிடிகள் அழிப்பு!

    By Veera Kumar
    |

    சென்னை: பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியின் கோச்சடையான், படம் வெளியான ஒரே நாளில் வழக்கம்போல இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தத் தகவல் தெரிந்தவுடன் படக்குழுவினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினி ரசிகர்கள் தனிக் குழுவாக செயல்பட்டு இதுவரை 10000 திருட்டு டிவிடிகளை கண்டுபிடித்து போலீஸ் துணையுடன் அழித்துள்ளனர்.

    ரூ 125 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது ரஜினியின் கோச்சடையான். இந்தப் படத்தை எத்தனை துல்லியமாக டிவிடியில் பிரின்ட் போட்டு, திருட்டுத்தனமாக வெளியிட்டாலும், தியேட்டரில் பார்த்தால் மட்டுமே கண்டு ரசிக்க முடியும். இருந்தாலும் திருட்டு டிவிடிகாரர்கள் அடங்குவதாக இல்லை.

    அலை அலையாக

    அலை அலையாக

    ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையான மோஷன் கேப்சரிங்
    டெக்னாலஜி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளதால், பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் அலை அலையாகப் படம் பார்க்க வருகிறார்கள்.

    ரசிகர்கள் கொண்டாட்டம்

    ரசிகர்கள் கொண்டாட்டம்

    ரஜினிகாந்த்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் ரசிகர்கள் விதவிதமாக தங்கள் ஆதர்ச நாயகனின் திரைப்படத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய டெக்னாலஜியை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்த மகிழ்ச்சியில் திரைப்பட குழுவினரும் உள்ளனர்.

    ஆன்லைனில் வழக்கம்போல..

    ஆன்லைனில் வழக்கம்போல..

    இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும்விதமாக, ஒரு சில வெப்சைட்டுகளில் கோச்சடையான் திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. விஷமிகள் இந்த இணையதளங்களில் திரைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளனர். 1.59 நிமிட நேரம் இத்திரைப்படம் முழுவதுமாக காண்பிக்கப்படுகிறது. அதாவது, படத்தலைப்பு முதல், முடிவு வரை படம் ஒலிபரப்பாகிறது. ஒருவிதத்தில் இது அதிர்ச்சியான விஷயம் கூட இல்லை. காரணம் எந்தப் படமாக இருந்தாலும் முதல் நாளே திருட்டுத்தனமாக இப்படி ஆன்லைனில் வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    திரைப்படத்தை திருடி பதிவேற்றம் செய்ய முடியாத டெக்னாலஜிகள் எல்லாம் வந்தாலும், கோச்சடையான் இப்படி திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும், படத்தின் பிரம்மாண்டத்தை கருத்தில் கொண்டு திரையரங்குகளுக்குதான் மக்கள் வந்து படம் பார்ப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    போலீசிலும் புகார்

    போலீசிலும் புகார்

    இருந்தாலும் இந்த ஆன்லைன் திருட்டுத்தனம் குறித்து போலீசிலும் கோச்சடையான் குழுவினர் புகார் செய்துள்ளனர். இந்த திருட்டுத்தனம் தொடராமல் நடவடிக்கை எடுக்க காவல் துறையும் உறுதியளித்துள்ளது.

    10000 டிவிடிகள்

    10000 டிவிடிகள்

    இதற்கிடையே, காவல்துறை உதவியுடன் கோவை பகுதியில் மட்டும் 10000 திருட்டு டிவிடிகளை கண்டுபிடித்து அழித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். சென்னை மற்றும் புதுவைப் பகுதியிலும் கோச்சடையான் திருட்டு டிவிடி வந்துள்ளதாக தகவல் கிடைத்ததால், ரசிகர்கள் தனித் தனி குழுவாக கடைகளில் சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    English summary
    A good quality capture of Rajinikanth's Kochadaiyaan leaked on an illegal website on Saturday, shocked film makers and fans across the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X