»   »  ரஜினியின் புதிய படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

ரஜினியின் புதிய படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் அடுத்த படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு இளம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்திருக்கிறது மனிதர் தலைகால் புரியாத அளவிற்கு சந்தோசமாக இருக்கிறார்.

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு இசைஞானியும் , அவரைத் தொடர்ந்து இசைப் புயலும் மாறி மாறி இசை அமைத்துக் கொண்டிருந்த வேளையில் புதுமுக இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

இயக்குனர் ரஞ்சித்தின் முந்தைய இரண்டு படங்களுக்கும் இசை அமைத்து இருந்த சந்தோஷிற்கு ரஞ்சித் மூலமாக இந்த புதிய படம் கிடைத்துள்ளது

சந்தோஷ் நாராயணன்:

2012 ம் ஆண்டு புதுமுக இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ்த் திரை உலகில் அறிமுகமான சந்தோஷ் நாராயணன் தன் வித்தியாசமான இசையால் அடுத்தடுத்த படங்களில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அட்டக் கத்தி டு ரஜினி படம் வரை:

அட்டகத்தியில் தொடங்கிய இவரின் இசைப் பயணம் பீட்சா, ஜிகர் தண்டா, சூது கவ்வும் ,மெட்ராஸ் மற்றும் 36வயதினிலே போன்ற படங்களைத் தாண்டி ரஜினி படம் வரை வந்திருக்கிறது.

இயக்குனர் ரஞ்சித்:

அட்டக் கத்தி, மெட்ராஸ் என்று இரண்டே படங்களின் மூலம் ரஜினி படத்தை இயக்க வந்திருக்கும் ரஞ்சித் இசை அமைப்பாளர் முதல் ஒளித் தொகுப்பாளர் வரை யாரையும் மாற்றவில்லை என்பது குறிப்பிடத் தக்கது .

சந்தோசை பாராட்டிய இசைப் புயல் :

சமீபத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையைக் கேட்ட இசைப் புயல் ஏ.ஆர் .ரகுமான் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஆஸ்கார் வரைக்கும் போகணும்..ஆமா...

 

English summary
Santhosh narayanan starts composing for rajini’s upcoming film
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos