»   »  விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் - கேவி ஆனந்த்... தேறுமா இந்த புதுக் கூட்டணி?

விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் - கேவி ஆனந்த்... தேறுமா இந்த புதுக் கூட்டணி?

Posted by:
Subscribe to Oneindia Tamil

மாற்றான், அனேகனைத் தொடர்ந்து ஏஜிஎஸ்ஸுக்கு மூன்றாவதாக ஒரு படம் இயக்குகிறார் கேவி ஆனந்த்.

இந்தப் படத்தில் அவர் வித்தியாசமான ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதி - டி ராஜேந்தர் இருவரும் நடிக்கின்றனர். பொதுவாக வெளிப்படங்களில் இதுவரை நடித்ததில்லை ராஜேந்தர். முதல் முறையாக இன்னொரு இயக்குநர் படத்தில் அவர் நடிக்கிறார்.

KV Anand - Vijay Sethupathy - TR movie announced officially

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்தில் காதலும் கடந்து போகும் நாயகி மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். நிர்வாக தயாரிப்பு எஸ்எம் வெங்கட் மாணிக்கம் .

இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கனேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர்.

ஜூலை மாதம் துவங்கவிருக்கும் இத்திரைப்படத்திற்க்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

மாற்றான் தோல்வி, அனேகன் சுமார் என பாக்ஸ் ஆபீசில் ரிசல்ட் வந்ததால், ஒரு பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்று இந்த புதிய கூட்டணியை அமைத்திருக்கிறார் கே வி ஆனந்த்.

English summary
KV Anand's Vijay Sethupathy - T Rajendar starrer new movie has officially announced today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos