twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா துறைக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும்! - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

    By Shankar
    |

    திருச்சி: சினிமா துறை பெண்களுக்குப் பாதுகாப்பான இடம். எனவே அத்துறைக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    திருச்சி அனைத்துப் பெண்கள் சங்கங்கள் மற்றும் இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து, திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய உலக மகளிர் தின விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:

    துணிந்து...

    துணிந்து...

    பெண்ணை யார் அவமதித்தாலும் துணிந்து எதிர்த்து போராடுங்கள். கலாசாரத்தை, சுயமரியாதையை, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல், ஆண்களோடு போட்டி போட்டு சாதித்துக் காட்ட வேண்டும்.

    ஆண் பெண் வேறுபாடு

    ஆண் பெண் வேறுபாடு

    குழந்தைகளை வளர்க்கும் போதே ஆண் மற்றும் பெண் குழந்தையிடம் வேறுபாட்டை காட்டி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். அது தொடக்கத்திலேயே பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. இரு குழந்தைகளையுமே சமமாக வளர்க்கத் தொடங்குங்கள்," என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு

    பெண்களுக்கு விழிப்புணர்வு

    பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா பேசுகையில், "பெண்களைக் காக்கக்கூடிய கடமை சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. பெண்களின் கருத்துகளுக்கு, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    பெண்களிடம் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவை. குறிப்பாக கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்றார் அவர்.

    விருதுகள்

    விருதுகள்

    முன்னதாக, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், மகப்பேறு மருத்துவர் டி. ரமணிதேவி, காந்தி கிராமத்தைச் சேர்ந்த எம். லட்சுமி ஆகியோருக்கு சிறப்புப் பணிக்காக விருதுகள் விழாவில் வழங்கப்பட்டன.

    மாநகராட்சி மேயர் அ.ஜெயா, பெண்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஜம்பகா ராமகிருஷ்ணன், இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    English summary
    Actress - Director Lakshmi Ramakrishnan welcomed more and more women to make good cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X