»   »  வாலு... கடைசி நேரத்திலும் கழுத்தைப் பிடித்த சிக்கல்!

வாலு... கடைசி நேரத்திலும் கழுத்தைப் பிடித்த சிக்கல்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

வாலு என்ற எந்த நேரத்தில் பெயர் சூட்டினார்களோ அந்தப் படத்துக்கு. படம் ரிலீசாகும் கடைசி நிமிடம் வரை வருமா வராதா என்ற சந்தேகம் விரட்டிக் கொண்டே இருந்தது.

இந்தப் படம் அளவுக்கு பிரச்சினைகளைச் சந்தித்த படம் வேறு இருக்குமா தெரியவில்லை. வாலு படத்துக்கு முதல் பிரச்சினை அதன் ஹீரோ சிம்புதான்.


படப்பிடிப்புக்கு ஒரு முறை கூட சொன்ன நேரத்துக்கு வந்ததில்லை. வந்தாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தவும் விட்டதில்லையாம் அவர். இதனை படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பலரிடமும் சொன்ன புகார்.


அனுமார் வாலாக இழுபறி

இதில் அனுமார் வாலாக இழுத்துக் கொண்டே போனது படம். வாங்கிய கடன் வட்டிக்கு வட்டி ஏறியதால் பெரும் சுமையாக அழுத்த, படத்தை வெளியிடும் எண்ணத்தையே தள்ளிப் போட்டுவிட்டார் தயாரிப்பாளர்.


கசப்பைப் பொருட்படுத்தாமல் நடித்த ஹன்சிகா

ஒரு கட்டத்தில் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர், இருக்கிற ஒரு பாடல் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு வெளியிட்டுவிடலாம் என்று கூற, உடனே படப்பிடிப்பையும் தொடங்கினர். சிம்புவுடன் இருந்த மனக்கசப்பைக் கூட பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார் ஹன்சிகா.


கடன் சுமை, நிதி நெருக்கடி

அதன் பிறகு மீண்டும் வெளியீட்டு முயற்சிகளை நிக் ஆர்ட்ஸ் ஆரம்பித்தது. ஆனால் வெளியிட முடியாத அளவுக்கு கடன் பிரச்சினை. நிதி நெருக்கடி.


கோர்ட்டுக்குப் போன மேஜிக் ரேஸ்

சரி நாங்களே வெளியிடுகிறோம் என சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் படத்தை வாங்க, அதன் வெளியீட்டு உரிமைக்காக ஏற்கெனவே பெரிய தொகை கொடுத்திருந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் நீதிமன்றத்துக்குப் போய் படத்துக்கு இடைக்காலத் தடை வாங்கியது.


 


 


எல்லாம் சேர்ந்து வாலு தலையில்

சிம்புவின் முந்தைய படத் தோல்விகளால் ஏற்பட்ட நஷ்டம், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் படங்களால் வந்த நஷ்டம் எல்லாம் வாலு தலையில் ஏற்றப்பட, படம் தள்ளித் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.


எல்லோரையும் சமாதானப்படுத்தி

எல்லாக் கடனையும் ராஜேந்தர் ஏற்க, விநியோகஸ்தர்களைச் சமாதானப்படுத்தி படம் வாங்க வைக்கும் வேலையை நடிகர் விஜய் பார்க்க, படம் ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.


விடாத சிக்கல்

அப்படியும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. அறிவித்த நாளிலிருந்து சின்னச் சின்னப் பிரச்சினைகள். நேற்று இரவு மீண்டும் ஒரு கடன் பிரச்சினை வர, அதை விடிய விடிய பேசித் தீர்த்திருக்கிறார்கள்.


லைசென்ஸ் வரலையேப்பா!

காசி திரையரங்கில் காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி என்று அறிவித்தனர். ஆனால் படத்தைத் திரையிடுவதற்கான லைசென்ஸ் தங்களுக்கு வரவில்லை என்று கூறிவிட்டனர் திரையரங்க நிர்வாகிகள்.


மீண்டும் பேச்சுவார்த்தை. இறுதியில் பத்து மணிக்கு வெளியானது வாலு!


 


English summary
Simbu starring Vaalu movie has been released amidst lot of problems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos