»   »  ரஜினியின் 2.ஓ... என்ன நடக்கிறது? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் 2.ஓ... என்ன நடக்கிறது? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி, 2.ஓ... இரு மெகா படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ரஜினி. கபாலி படம் முடிந்து சென்சாருக்குப் போகப் போகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

எந்திரனின் இரண்டாம் பாகமான 2.ஓ எந்த நிலையில் உள்ளது?


இரண்டு ஷெட்யூல்

இதுவரை படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த இரண்டு ஷெட்யூலிலும் விஞ்ஞானி ரஜினி, வில்லன் அக்ஷய் குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக க்ளைமாக்ஸை டெல்லியில் எடுத்துவிட்டார் ஷங்கர்.


அமெரிக்காவில்...

அடுத்து எடுப்பதெல்லாம் சிட்டி ரோபாவாக ரஜினி வரும் காட்சிகள். இதற்காக ஏற்கெனவே அமெரிக்கா போய் மேக்கப் டெஸ்ட்களை முடித்துவிட்டு வந்தார் ரஜினி. இப்போது மீண்டும் அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்.


ரோபோ மாடல்கள்

2.ஓவில் இடம்பெறும் ரோபோக்களுக்கேற்ப மாடலிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பங்கேற்க மேலும் ஒரு மாதம் வரை ரஜினி அமெரிக்காவிலேயே தங்கி இருப்பார். அவரைக் கவனித்துக் கொள்ளவே குடும்பத்தினர் உடன் சென்றுள்ளனர்.


செப்டம்பரில்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் அறிவித்துள்ளார். படத்தை 2017 இறுதியில் வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


 


 


Read more about: rajinikanth, 2 o, ரஜினி, 2 ஓ
English summary
Here is the latest updates on Rajinikanth's Shankar directed magnum opus 2.O, the sequel of Enthiran.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos