twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா திமிரோடு இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன தப்பு?: சினேகன்

    By Siva
    |

    சென்னை: ஒன்னுமே இல்லாத தெருப்பொறுக்கியாக உள்ள நமக்கே திமிர் இருக்கும்போது இந்த ஒட்டுமொத்த இசையும், காற்றையும் ஆக்கிரமித்துள்ளாரே இளையராஜா திமிரோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்ன தவறு என பாடல் ஆசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

    வேலு பிரபாகரன் இயக்கி, நடித்துள்ள படம் ஒரு இயக்குனரின் காதல் டைரி. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின்
    இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    விழாவில் பேசிய பாடல் ஆசிரியர் சினேகன் கூறியதாவது,

    பிரபாகரன்

    பிரபாகரன்

    பிரபாகரன் அண்ணன் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படைப்புக்கும், படைப்பாளனுக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் அப்படி இருந்தார்கள். அதன் பிறகு அனைத்து படைப்பாளர்களும் எழுத்தாளர்களை பொறுத்த வரை வேலைக்காரனவே இருந்துவிட்டோம். ஏனென்றால் படைப்பு வேறு முகமாக இருக்கிறது படைப்பாளன் வேறு முகமாக இருக்கிறது.

    அவர் படமா?

    அவர் படமா?

    அந்த வகையில் பிரபாகரனை பார்த்தால் ஏதோ தீண்டத்தகாதவனை பார்த்தது போன்று அய்யோ அவர் படமா என்ற கேள்வி வரும். அவருடைய அடுத்த படத்தில் நான் நடிப்பதாக திட்டம் போட்டோம். பிரபாகரன் சார் படத்தில் நடிக்கிறேன் என்று யாரிடமாவது சொல்லும் போது அய்யோ அவர் படத்தில் நடிக்காதீங்க, பெயர் கெட்டுவிடும் என்றார்கள்.

    பெயர்

    பெயர்

    ஏற்கனவே எனக்கு என்னடா பெயர் இருக்கு கெட்டுப் போவதற்கு. உண்மை அது தான். தன்னுடைய பலவீனத்தை ஒத்துக் கொள்பவன் தான் பலசாலி. அந்த வகையில் மிகச்சிறந்த பலசாலியாகவே பிரபாகரன் எனக்கு தெரிகிறார். எதையும் அவர் மறைப்பது இல்லை. மேடைக்கு ஒன்னு, படைப்புக்கு ஒன்னு, வீட்டுக்கு ஒன்னு, பத்திரிகைக்கு ஒன்னு என அவர் பேசுவது இல்லை.

    மேட்டர் படம்

    மேட்டர் படம்

    எத்தனை படைப்பாளிகள் நிதர்சனமான உண்மையை இந்த சமூகத்திற்கு முன்பு ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார்கள்? பிரபாகரன் படம் முழுக்க முழுக்க மேட்டர் படம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்ல. அதுவும் சேர்த்து தான் வாழ்க்கை. அது இல்லாமல் வாழ முடியுமா?

    இளையராஜா

    இளையராஜா

    ஆர்டி பர்மனுடைய இசை பரவிக்கிடந்த போது மச்சானை பார்த்தீங்களா என்று வாழைத்தோப்பில் இருந்து வந்தார் இளையராஜா. நீ கருப்பனாய் பிறந்தது தவறு. குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகம் இருந்திருக்க வேண்டும், சாலைக்கு உன் பெயர் வைத்திருக்க வேண்டும் அல்லவா, பள்ளிக்கூடம் கட்டியிருக்க வேண்டும் அல்லவா. வாழும்போது வாழும் கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காத சமூகம் எங்களுக்கு தேவை இல்லை.

    திமிர்

    திமிர்

    ஒன்னுமே இல்லாத தெருப்பொறுக்கியாக உள்ள நமக்கே திமிர் இருக்கும்போது இந்த ஒட்டுமொத்த இசையும், காற்றையும் ஆக்கிரமித்துள்ளாரே இளையராஜா திமிரோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்ன தவறு. இளையராஜாவை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. எவன் உண்மையாக இருக்கிறான், எவன் நடிக்கிறான் என்பதை ராஜா சாருக்கு பார்த்தாலே தெரியும். குழந்தைங்க அவர் என்றார் சினேகன்.

    English summary
    Lyricist Snehan said that let maestro Ilayaraja have some pride and there is nothing wrong in it. He said so at the audio launch of the movie Oru Iyakkunarin Kadhal Diary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X