twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த ரஜினியின் லிங்கா!

    By Shankar
    |

    சென்னை: வெளியான மூன்றே நாட்களில் ரஜினிகாந்தின் லிங்கா படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

    ரஜினி இரு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியான படம் லிங்கா.

    தமிழ், தெலுங்கில் உலகம் எங்கும் இந்தப் படம் வெளியானது. இந்தியில் இந்தப் படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

    Lingaa collects Rs 100 plus cr in just 3 days

    நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த நேரடிப் படம் என்பதால் படத்துக்கு கூட்டம் அலைமோதியது. தமிழகத்தைப் போலவே, வெளிநாடுகளிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

    அரங்குகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய சாதனையே நிகழ்ந்தது.

    முதல் நாள் மட்டும் ரூ 37 கோடியைக் குவித்தது லிங்கா படம். இது ரெகுலர் ஷோக்கள் மூலம் வந்த வசூல். அதிகாலை 1 மணி, 4 மணி மற்றும் 8 மணிக்கு நடந்த சிறப்புக் காட்சி வசூல் இதில் சேர்க்கப்படவில்லை.

    இந்த நிலையில் முதல் மூன்று நாட்களுக்கான வசூல் தொகை எவ்வளவு என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.

    உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இந்தப் படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துவிட்டது.

    இந்திப் பதிப்பும் வெளியாகியிருந்தால், இந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடியும், ஆந்திரம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ 26 கோடியும், வெளிநாடுகளில் ரூ 21 கோடியும் வசூலாகியுள்ளது லிங்காவுக்கு.

    இது ரஜினியின் முந்தைய படமான எந்திரனுக்கு நிகரான வசூலாகும். சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையத்தில் லிங்காவின் வசூல் சாதனை குறித்துதான் பலரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.

    English summary
    Rajini's Lingaa has collected a record Rs 100 cr in just 3 days worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X