twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசில்லையென்றாலும் கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன்- லிங்குசாமி

    By Manjula
    |

    சென்னை: பணம் இல்லையென்றால் கூட கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

    இயக்குநர் லிங்குசாமியின் கவிதைத்தொகுப்பு வெளியீடு இயக்குநர் கவுதம் மேனனின் திருவான்மியூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இதில் கவுதம் மேனன், பார்த்திபன், கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    Lingusamy Lingu 2 Poetic Launch Event

    முதல் பாகத்தைத் தொடர்ந்து 2 வது பாகத்தை வெளியிடும் லிங்குசாமி, இதற்கு 'லிங்கூ 2: செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்' என்று பெயர் வைத்திருக்கிறார்.

    விழாவில் லிங்குசாமி பேசும்போது ''ஊரிலிருந்து வரும்போது கவிதை இருந்தால் போதும் காசு, பணம் தேவையில்லை என்று தான் நினைத்தேன்.

    அப்போது நினைத்தது போலவே இப்போதும் நினைக்கிறேன்.எல்லாம் கடந்து போகும் என்ற மனநிலையோடு எனது அடுத்தப் படத்தை தொடங்கவுள்ளேன்.

    என்னைச்சுற்றி இவ்வளவு பேர் இருக்கும்போது பிரச்சினைகள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. என்னுடைய எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இந்த விழாவை எனது தனிப்பட்ட விழாவாகக் கருதாமல் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவே கருதுகிறேன். இதுவும் கடந்து போகும்'' என்று கூறியிருக்கிறார்.

    லிங்குசாமி சொந்தமாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Lingusamy's Lingu 2 Poetic Release held in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X