twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருக்கும் தராத அனுமதியை லிங்குசாமிக்குத் தந்த ரஜினி!

    By Shankar
    |

    படத் தலைப்புகளில் தன் பெயரைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி தராத ரஜினிகாந்த், இயக்குநர் லிங்குசாமி கேட்டதும் அனுமதி கொடுத்துள்ளார்.

    இந்தத் தகவலை லிங்குசாமியே நேற்று தெரிவித்தார்.

    நேற்று சோளிங்கரில் நடந்த ரஜினி ரசிகர்கள் மாநாட்டல் பேசிய இயக்குநர் லிங்குசாமி, "நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். அவரைப்போல பேசுவேன், ஆடுவேன், பாடுவேன். அப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகன்.

    நினைத்துப் பார்க்கிறேன். இப்போது கூட அவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். எல்லாரும் விழா முடிந்து பாதுகாப்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்றுஅவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும்.

    அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். இதை நாம் சொல்லக் கூடாது. எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் விருப்பம் என்னவோ அதைச் செய்யட்டும்.

    நான் 'முரட்டுக்காளை' படத்தை 15 முறை பார்த்தவன். நான் இயக்கும் படத்தில் எந்த கதாநாயகன் நடித்தாலும் அதில் ரஜினி சார் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் வசனம் எழுதுவேன்.

    ரஜினி முருகன்

    ரஜினி முருகன்

    தன் பெயரை படத் தலைப்பாகப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி தராதவர் ரஜினி சார். ஆனால் 'ரஜினி முருகன்' படத்துக்கு தலைப்புக்கு அனுமதி கேட்ட போது உடனே விட்டுக்கொடுத்தார். 'ரஜினி முருகன்' என்கிற பெயர் மேஜிக்கால் அது இன்று வசூலைக் குவித்து வருகிறது, " என்றார்.

    பாபி சிம்ஹா

    பாபி சிம்ஹா

    நடிகர் பாபி சிம்ஹா பேசும் போது, ''நான் நடித்த 'ஜிகர் தண்டா' படம் பார்த்து .சூப்பர் ஸ்டார் என்னை அவ்வளவு பாராட்டினார். இந்தக் கதை எனக்குத் தெரிந்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றார். சூப்பர் ஸ்டார் என்றால் தலைவர் ஒருவர் மட்டுமே,' என்றார்.

    ஜீவா

    ஜீவா

    நடிகர் லொள்ளு சபா ஜீவா பேசும் போது, "மலரட்டும் மனிதநேயம் என்கிற இந்த விழா மாநாடு போல இருக்கிறது. இது கூட்டப்பட்ட கூட்டமல்ல. தானாக வந்த கூட்டம்.

    ஜெருசேலம் தேவாலயத்தில் எவ்வளவோ பேர் காணிக்கை செலுத்தினார்களாம். வசதியானவர்கள் பலரும் காணிக்கை செலுத்தினார்களாம். ஆனால் எவ்வளவோ பேரை விட ஒரு ஏழைப்பெண் கையிலிருந்த இரண்டு நாணயத்தை அப்படியே காணிக்கையாகப் போட்டாளாம். அதுவே பெரிய காணிக்கையாகப் புகழப்பட்டதாம்.

    கோச்சடையான் அனுபவம்

    கோச்சடையான் அனுபவம்

    அதுபோல தங்களிடம் இருப்பதில் கொஞ்சம் கொடுப்பதை விட கையில் இருப்பதை அப்படியே கொடுக்கும் விழாவாக இது இருக்கிறது. 'கோச்சடையான்' படத்தின் போது தலைவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து. நான் அவர் மாதிரியே பேசி நடிப்பதைப் பார்த்து எத்தனை வயதிலிருந்து இது? என்றார். 5 வயதிலிருந்து என்றேன்,'' என்றார்.

    கருணாகரன்

    கருணாகரன்

    நடிகர் கருணாகரன் பேசும்போது, "ஒரு மலைப் பகுதியில் 'லிங்கா' படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது புறப்பட்டுப் போன ரஜினி சாரின் கார் திரும்பி வந்தது. விசாரித்தபோது தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிக் காத்திருந்த ஒரு ரசிகனுக்காக திரும்பி வந்திருக்கிறார். அந்த ரசிகனுக்குக் காலில் அடிபட்டிருந்ததாம். அதனால் அலையவிட க்கூடாது என்றுதான் போன ரஜினி சார் கார் திரும்பி வந்திருக்கிறது.. அது தான் சூப்பர் ஸ்டாரின் மனித நேயம்,'' என்றார்.

    கருணாஸ்

    கருணாஸ்

    நடிகர் கருணாஸ் பேசும்போது ," இது எல்லாரும் எதிர்பார்க்கும் விழா. இத்தனைக் காலம் ரசிகர்களாக இருந்த நாங்கள் ஒன்றை மட்டும் கேட்கிறோம். அடையாளம் கேட்கிறோம். மற்றவர்கள் நம்மைக் கேலி பேசுகிறார்கள். நம்மை ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லஅடையாளம் கேட்கிறோம் நாம் யாரென்று காட்டஅடையாளம் கேட்கிறோம் இதில் தயக்கமோ சங்கடமோ இருந்தால் சைகை மட்டும் காட்டுங்கள் நாங்கள் யாரென்று காட்டுகிறோம்," என்றார்.

    உதவிகள்

    உதவிகள்

    விழாவில் நலிவடைந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு 15லட்ச ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள்,இஸ்திரிப்பெட்டிகள், 3 சக்கர சைக்கிள்கள் பண உதவி என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக யூகே.முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது. இவ் விழாவை விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மற்றும் பண்பலை ஆர்.ஜே. ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    English summary
    In Rajini fans mega meet, director Lingusamy says that he got Rajinikanth's permission to use in movie Rajinimurugan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X