twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினேகாவை உங்க தங்கையா நினைச்சுப் பாருங்க! - இது சேரன் ஸ்டேடஸ்

    By Shankar
    |

    லைகா தயாரிப்பு நிறுவனம் இப்போது கத்தி படத்தைத் தயாரித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது ராஜபக்சேவின் பினாமி நிறுவனம், லைகா சுபாஷ்கரணும் ராஜபக்சேவும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்று பிரச்சினை வெடித்த போது ஏகப்பட்ட விளக்கங்களைச் சொன்னார்கள்.

    படம் வெளியாக இன்னும் 15 நாட்கள்தான் உள்ளன. எதிர்ப்பாளர்கள் ஓய்வார்களா... அல்லது இன்னும் வேகம் காட்டுவார்களா எனத் தெரியவில்லை.

    Lyca and me.. Cheran's new explanation

    இதற்கிடையில் லைகா நிறுவனம் வேறு பெயரில் ஏற்கெனவே ஒரு படத்தைத் தயாரித்திருந்தனர். அப்போது இந்த நிறுவனத்துக்குப் பெயர் ஞானம் பிலிம்ஸ். இதே சுபாஷ்கரன்தான் தயாரிப்பாளர். படத்தின் பெயர் பிரிவோம் சந்திப்போம். சினேகாவும் சேரனும் நடிக்க, கரு பழனியப்பன் இயக்கியிருந்தார்.

    இதுகுறித்து ஏற்கெனவே ஒன் இந்தியாவில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளோம். இந்த விஷயங்கள் வெளியில் தெரிந்த பிறகு சேரன், சினேகா உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்களை ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக சேரனின் பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக எழுதினர்.

    இதற்கு மேலும் தாங்காது என்று நினைத்த சேரன், தன் பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

    அந்த விளக்கம்:

    "ஈழத்துக்கு ஆதரவாவும் லைக்காவுக்கு எதிராவும் போராடுற தம்பிகள் கவனத்திற்கு... தயவுசெய்து உங்க பிரச்சினைக்கு நான் ஆள் இல்ல.... அப்பறம் எனக்கு உங்க பிரச்சினையை வச்சு பொழப்பு நடத்த தேவையும் இல்ல..

    உங்களுக்கு யார்கூட பிரச்சினையோ அவங்களோட மோதுங்க... எனக்கு அரசியலுக்கு வர்ற ஐடியாலாம் இல்ல... அவுங்க (லைகா) யாருன்னே தெரியாத காலத்தில அவுங்க படத்துல நடிச்சது... அதுவும் கரு. பழனியப்பனுக்காக... எனவே என்னோட பேஸ்புக் வால்ல இனிமே உங்க கருத்துக்களை பதிவு பண்ணாதீங்க.

    ஒரு தடவை சொன்னா புரியும்னு நினைக்கிறேன் ... இதற்கு மேலும் என் வம்புக்கு வரமாட்டீங்கன்னு நம்புறேன்... சினேகாவைப் பற்றி எழுதும்போது அவங்க உருவத்துல உங்க தங்கையை நினைச்சுப் பாருங்க... எழுத முடியுமான்னு பார்ப்போம். பெண்களை தாய்போல பார்த்த பிரபாகரன் தம்பிகளா நீங்கள்... டவுட்தான்.. கெடுக்கவேண்டாம் உயிர் சிந்தி வளர்த்த இயக்கத்தின் நற்பெயரை!

    -இப்படி எழுதியிருக்கிறார் சேரன்.

    English summary
    Director Cheran has gave an explanation on his part in Lyca mobile company's earlier project Pirivom Santhippom.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X