twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே சிரிப்பு போலீஸ்பா... ‘விந்தை’ காவல்நிலையம்

    By Mayura Akilan
    |

    காவல் நிலையத்தையும் காவலர்களையும் கலாய்ப்பது என்றால் இந்த சினிமாகாரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல... அப்படி ஒரு அசால்ட் அடி அடிப்பார்கள்.

    அலெக்ஸ் பாண்டியன், வால்டர் வெற்றிவேல் என ரஜினி முதல் விக்ரம், சூர்யா என கெத்து போலீஸ்களைப் பற்றி படம் எடுத்தாலும் வடிவேலு, மானோபாலா, கோவை சரளா என சில சிரிப்பு போலீஸ்களைப் பற்றியும் படம் எடுத்து கலாய்த்து எடுத்து விடுவார்கள். அப்படி ஒரு கலாப்பான காவல்நிலைய படம்தான் விந்தை என்கின்றனர்.

    பேருந்து, ரயில், கப்பல், ஏன் காப்பி ஷாப்பில் கூட ஒரு படத்தின் முழு கதையும் நகர்வது போல படங்கள் வெளியாகியிருக்கின்றது. ஆனால், முதல் முறையாக காவல் நிலையம் ஒன்றில், முழு படத்தையும் படமாக்கியுள்ளனராம். இரவு 1 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே நடைபெறும் வகையில் இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாம்.

    அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் நிறுவ்னாம் சார்பில் ஆர்.எல்.யேசுதாஸ், ஆர்.ஒய்.ஆல்வின், ஆர்.ஒய்.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை லாரா இயக்குகிறார்.

    [விந்தை படங்கள்]

    நாயகன் – நாயகி

    நாயகன் – நாயகி

    'விந்தை' படத்தில் 'விழா' பட நாயகன் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மனீஷாஜித் நடிக்கிறார். இப்படம் காதல் பிளஸ் காமெடி என்ற விதத்தில் உருவாகியுள்ளது.

    ப்ரமோசன் ஆன குட்டீஸ்கள்

    ப்ரமோசன் ஆன குட்டீஸ்கள்

    மனீஷா ஜித் கம்பீரம் படத்தில் சரத்குமாரின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது கூடுதல் தகவல். நாயகன் மகேந்திரனும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்போது ஹீரோவாகியுள்ளார்.

    காமெடி பட்டாளம்

    காமெடி பட்டாளம்

    மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர் மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவனாராயண மூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

    ஒரே காமெடிதான்

    ஒரே காமெடிதான்

    இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் லாரா, ஏற்கனவே 'வர்மம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் லாரா.

    போலீஸ் கேஸ் போடமாட்டாங்களோ

    போலீஸ் கேஸ் போடமாட்டாங்களோ

    காமெடி மட்டுமல்ல கொஞ்சம் கவர்ச்சியும் கலந்து கட்டுகிறது விந்தையில். ஒரு வார்த்தை வசனத்துக்கு எல்லாம் யார் யாரோ கேஸ் போடுறாங்கப்பா... ஆனா இப்படி ஒரு படம் முழுக்க காவல்துறையினரை கலாய்த்து எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை காவல்துறையினர் என்றாலே வழக்கு போடமாட்டார்கள் என்ற தைரியம்தான்.

    English summary
    Mahendran and Manishajith Play Vindhai Movie. Vindhai is a comedy movie directed by Laara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X