»   »  2 அழகு தேவதைகளுடன்... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...!

2 அழகு தேவதைகளுடன்... மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யாவும், துருவாவும் நடிக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறுகிறார் இயக்குநர் ராகேஷ்.

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் வி மதியழகன், ஆ. ரம்யா இணைந்து வழங்க, பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் பிஜி முத்தையா இணை தயாரிப்பில் ராகேஷ் இயக்கத்தில் துருவா- ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகும் படம்தான் இந்த மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன.

இந்தக் குழுவினர் வழங்கும் 2வது படம் இது. முதலில் இவர்கள் ராஜா மந்திரி என்ற படத்தை தயாரித்துள்ளனர். அதில் மெட்ராஸ் பட நாயகன் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார்.

ராஜாவின் உதவியாளர்...

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தை இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்குகிறார். திலகர் பட நாயகன் துருவா ஹீரோவாக நடித்தசுள்ளார்.

2 தேவதைகள்...

இப்படத்தில் இரண்டு பேர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஒருவர் ஐஸ்வர்யா தத்தா. இன்னொருவர் அஞ்சனா. இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்'கோபி, ‘சதுரங்க வேட்டை' புகழ் வளவன், 'நான் மகான் அல்ல'ராம் மற்றும் நிறைய புதுமுகங்களின் அறிமுகங்களும் நடிக்கின்றனர்.

நடிகர் திலக படத் தலைப்பு...

நடிகர் திலகத்தின் ‘தில்லானா மோகனாம்பாள்' படத்தில் வரும் புகழ் பெற்ற பாடலின் முதல் வரியையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

தொடர்பு உண்டு...

மூன்றாம் தலைமுறை முதல் இன்றுள்ள சிறார்கள் வரை ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெற்ற வரிகள் இவை. சொன்னதும் சட்டென்று எல்லோரின் மனதிலும் இடம் பிடிக்கும் என்பதால் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' என்ற பாடல் வரியை படத்தின் தலைப்பாக வைத்தோம். இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றார் இயக்குநர் ராகேஷ்.

குற்றங்களை மையமாக வைத்து...

இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. தினம் தினம் பெண்கள், குழந்தைகள் சந்திக்கும் அச்சுறுத்தலும், பிரச்சனைகளும் அதற்கான தீர்வுடன் விளக்கும் படம் தான் "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன"

வேகமாக வளருகிறது...

ஒளிப்பதிவை பிஜி முத்தையா கையாள, இசையை ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே','உறுமீன்' படத்தின் இசையமைப்பாளர் அச்சு மேற்கொள்கிறார், எடிட்டிங்கை செல்வா கவனிக்க பாடல்களை பா.விஜய் எழுத, கலையை ரெம்போன் பால்ராஜ் (பாபநாசம், தனி ஒருவன்) செய்ய, சண்டைப் பயிற்சி தருகிறார் விமல். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது " மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன" .

English summary
Marainthirunthu paarkum marmam enna is an upcoming tamil film directed by Rakesh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos