»   »  மகள் சம்மதத்துடனேயே காவ்யாவை மணந்தேன்: நடிகர் திலீப்

மகள் சம்மதத்துடனேயே காவ்யாவை மணந்தேன்: நடிகர் திலீப்

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மகள் மீனாட்சியின் சம்மதத்தோடு தான் நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டதாக மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப் தன்னை விட 16 வயது சிறியவரான நடிகை காவ்யா மாதவனை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். காவ்யாவுடன் ஏற்பட்ட தொடர்பால் தான் திலீப் தனது மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து திலீப் கூறுகையில்,

காவ்யா

என முதல் திருமணம் விவாகரத்தில் முடிய காவ்யா காரணம் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அவர் காரணம் அல்ல. காரணத்தை கூறினால் பலருக்கு பிரச்சனை ஏற்படும். எனக்காக காவ்யா பலமுறை அவமானப்பட்டுள்ளார்.

மறுமணம்

என்னை மறுமணம் செய்து கொள்ளுமாறு என் குடும்பத்தார் தெரிவித்தனர். என் மகள் மீனாட்சி சம்மதித்தால் மட்டுமே மீண்டும் திருமணம் செய்வேன் என்றேன்.

மகள்

என் மகளுடன் மறுமணம் குறித்து பேசினேன். அவர் சம்மதம் தெரிவித்த பிறகே மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். எனக்காக பல அவமானங்களை தாங்கிய காவ்யாவை மணப்பதே சரி என்று பட்டது.

திருமணம்

காவ்யாவை மணக்கும் எனது முடிவை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்களும் சரி என்றார்கள். காவ்யாவின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினோம். இதையடுத்து நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் போன் செய்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தோம்.

English summary
Actor Dileep said that he married actress Kavya Madhavan with his daughter Meenatchi's permission.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos