»   »  என்ன சல்மான், லூலியா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரு: வடை போச்சே

என்ன சல்மான், லூலியா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரு: வடை போச்சே

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கும், சல்மான் கானுக்கும் இடையே நட்பை தவிர வேறு எதுவும் இல்லை என நடிகை லூலியா வந்தூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பது கடவுளுக்கே தெரியாது என்று அவரின் தந்தை சலீம் கான் தெரிவித்தார். அவர் வாயில் சக்கரை தான் போட வேண்டும்.

காரணம் சல்மானின் காதலி என்று கூறப்படும் ரோமானிய நடிகை லூலியா வந்தூரின் பேட்டி.

காதலா?

சல்மான் கானும், லூலியா வந்தூரும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. அதற்கு ஏற்றது போன்று லூலியாவும் அடிக்கடி சல்மான் குடும்பத்தாரை சந்தித்து வருகிறார்.

திருமணம்

சல்மானுக்கும், லூலியாவுக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று எல்லாம் கூறப்பட்டது. ரோமானிய மீடியாவோ ஒருபடி மேலே போய் அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றது.

நட்பே

எனக்கும், சல்மான் கானுக்கும் இடையே எதுவும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என்று லூலியா தெரிவித்துள்ளார். என்ன இந்த லூலியா இப்படி பொசுக்குன்னு கூறிவிட்டாரே என்று சல்மானின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சல்மான்

காதல் பற்றியும் சரி, திருமணம் பற்றியும் சரி சல்மான் கான் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 50 வயதிலும் மனிதர் ஜாலியாக இருக்கிறார். கல்யாணம் நடக்கட்டும் அப்பொழுது கூறுகிறேன் என்கிறார் சல்மான்.

English summary
Salman Khan's alleged girl friend Lulia Vantur said that there is nothing brewing between them and they are just friends.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos