twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதந்திர தின விழாவில் மோடி படத்துடன் கவர்ச்சி உடை.. மீரட் கோர்ட்டில் நடிகை ராக்கி சவந்த் மீது வழக்கு

    |

    மீரட்: அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் மோடி படத்துடன் கூடிய கவர்ச்சி உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ராக்கி சவந்த் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மீரட் நீதிமன்றம்.

    பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சமில்லாதவர் பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தி நாடு முழுவதும் பிரபலமானவர் இவர்.

    கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஷ்டிரிய ஆம் என்ற கட்சியை தொடங்கி, அரசியலிலும் குதித்தார். ஆனால், தேர்தலுக்குப்பின் தனது கட்சியை இந்திய குடியரசு கட்சியுடன் இணைத்து விட்டார்.

    மோடி படங்களுடன்...

    மோடி படங்களுடன்...

    இந்நிலையில், இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அமெரிக்காவில் கடந்த 10ம் தேதி சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராக்கி சவந்த, பிரதமர் மோடியின் படங்களுடன் கூடிய கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராக்கி சவந்த்தின் இந்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலானது,

    வழக்குப் பதிவு...

    வழக்குப் பதிவு...

    இதைப் பார்த்து ஆவேசமடைந்த உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த முன்னேற்ற பெண்கள் நலச் சங்கம் என்ற தொண்டு நிறுவனம், ராக்கி சவந்த் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்குத் தொடர்ந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது மீரட் நீதிமன்றம்.

    ஆடையால் விளம்பரம்...

    ஆடையால் விளம்பரம்...

    இது குறித்து சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் லதா கூறுகையில், ‘‘பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் ராக்கி சவந்த் உடை அணிந்துள்ளார். இதுபோன்ற ஆடையால் விளம்பரம் தேட முடியும் என்பது அவருக்கு தெரியும்'' என்றார்.

    வேண்டுகோள்...

    வேண்டுகோள்...

    இதேபோல், தொண்டு நிறுவனத்தின் வக்கீல் நிதின் அலுவாலியா கூறுகையில், ‘‘குற்றவியல் நடைமுறை சட்டம் 156(3) பிரிவின் கீழ் நாங்கள் மனு செய்துள்ளோம். 190வது விதியின் கீழ் இது குறித்து எந்த நீதிபதியாலும் விசாரணைக்கு உத்தரவிட முடியும். இந்திய தண்டனை சட்டம் 294வது பிரிவு (பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்வது), 501வது பிரிவு(அவமதிக்கும் வகையில் படங்களை அச்சிடுவது) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என்றார்.

    English summary
    A court in Meerut will hear a plea against actor Rakhi Sawant for wearing a black dress with photos of Prime Minister Narendra Modi plastered all over it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X