»   »  போராடி தணிக்கை சான்றிதழைப் பெற்றது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ'

போராடி தணிக்கை சான்றிதழைப் பெற்றது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ'

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுதணிக்கையில் ஏ சான்றிதழைப் பெற்றிருக்கிறது பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' திரைப்படம்.

சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்தை 'ஆள்' புகழ் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.


Metro Movie Gets A Certificate

தொடர் வழிப்பறி கொள்ளைகளை வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் சிரிஷ் நாயகனாகவும், பாபி சிம்ஹா வில்லனாகவும் நடித்திருக்கின்றனர்.


போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இப்படத்தை தணிக்கைக்கு படக்குழு அனுப்பி வைத்தது. ஆனால் வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளது என்று கூறி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.


தணிக்கை அதிகாரிகளின் மறுப்பால் 'மெட்ரோ' குழு மறுதணிக்கைக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர்.


இதுகுறித்து படக்குழு '' செயின் கொள்ளைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை மற்றும் காட்சிகளை அமைத்திருக்கிறோம்.


உண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு என்பதால் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. அதனால் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.


தற்போது மறுதணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடவிருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

English summary
Bobby Simha's Metro Movie Gets A Certificate from Censor Board.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos