twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்: பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஷங்கர் ஹேப்பி அண்ணாச்சி

    By Siva
    |

    சென்னை: கனவுகள் நனவாகின்றன என்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    மோடி 2016ம் ஆண்டில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    சிவாஜி

    சிவாஜி

    இயக்குனர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதா கூட்டணியோ 2007ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்திலேயே கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ஐடியாவை தெரிவித்தனர்.

    முன்னோடி

    முன்னோடி

    கறுப்பு பணப் புழக்கத்தை ஒழிக்க இது மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என ஆளாளுக்கு புகழ்கிறார்கள். இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் நடவடிக்கை குறித்து 9 ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கரும், சுஜாதாவும் கூறிவிட்டனர். அப்போது அது வெறும் படமாகத் தான் தெரிந்தது. தற்போது அதன் மதிப்பு பலருக்கும் புரிகிறது.

    படம்

    படம்

    ஷங்கர் ஏதாவது புதுமை செய்கின்றேன் என்ற பெயரில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு காட்சியை வைத்துள்ளார் என மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். இன்றோ ஷங்கர், சுஜாதா ஆகியோர் தீர்க்கதரிசி என்று புகழ்கிறார்கள்.

    ட்வீட்

    கறுப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்துள்ள நடவடிக்கை பற்றி ஷங்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மிக்க மகிழ்ச்சி...கனவுகள் நனவாகின்றன. ஹாட்ஸ் ஆஃப் டூ நரேந்திர மோடிஜி என தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Shankar who along with writer Sujatha suggested demonitising Rs. 500 and Rs. 1000 notes to curb black money 9 years ago tweeted that, "Extremely happy... Dreams coming true. Hats off to narendramodi ji".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X