»   »  கபாலி... கேரளா உரிமையைக் கைப்பற்றிய மோகன்லால்!

கபாலி... கேரளா உரிமையைக் கைப்பற்றிய மோகன்லால்!

Subscribe to Oneindia Tamil

கபாலி காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே போகிறது. உலகமெங்கிலுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கபாலியின் கேரள உரிமை 8.5 கோடிக்கு போயிருக்கிறது. வாங்கியிருப்பவர் நம்ம மோகன்லால்.

Select City
Buy Kabali (U) Tickets

மலையாள முன்னணி ஹீரோவான மோகன்லால் தமிழ்ப் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்தும் நல்ல லாபம் பார்த்து வந்தார். சில படங்கள் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் சில காலம் அதில் ஒதுங்கி இருந்தவர், கபாலி மூலம் 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்று பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறார்.


Mohan Lal captures Kabali Kerala rights

இந்த 8.5 கோடி என்பது இதுவரை எந்த தமிழ் படமும் பண்ணாத சாதனை. கேரளாவில் மட்டும் 150 தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறாராம் லால் சேட்டன். ரஜினியும் மோகன்லாலும் நண்பர்கள்தான் என்பதால் கேரளாவில் நடக்கும் புரமோஷன்களிலும் ரஜினியை கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் மோகன்லால். சூப்பர்ஸ்டாரும் ஓகே சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். ஒருநாள் சூப்பர் ஸ்டாரின் ஷெட்யூலில் கேரளாவுக்கு ஒதுக்கப்படலாம்.


ரஜினியுடன் இணைந்து நடிக்க வெகு நாட்களாக ஆசைப்படுபவர்தான் மோகன்லால். சிவாஜி வில்லன் ரோலுக்கு முதலில் பேசப்பட்டது லால்சேட்டன்தான். வில்லன் என்றதும் அவர் தயங்கியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.


இந்திய சூப்பர்ஸ்டார் படத்தை, கேரள சூப்பர்ஸ்டார் வாங்கி வெளியிடுவது சிறப்பு தானே!

English summary
Actor Mohan Lal has captured the Kerala releasing rights of Rajinikanth's Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos