twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட்டா... அப்பறம் ராஜேஷ் எப்படிப் படமெடுப்பாரு??

    By Manjula
    |

    சென்னை: நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர பூரண மதுவிலக்கு, என்ற யுக்தியை அனைத்துக் கட்சிகளும் கையிலெடுத்துள்ளன.

    ஒருவேளை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திட்டம் கொண்டு வரப்பட்டால் தங்கள் நிலை என்னாவது? என்று குடிமகன்கள் தற்போது தீவிரமாக கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.

    ஆனால் பூரண மதுவிலக்கு திட்டத்தால் குடிமகன்களை விடவும் அதிகம் பாதிக்கப்படப் போவது, இயக்குநர் ராஜேஷாகத் தான் இருக்கும் என்று நமது 7 வது அறிவு கூறுகிறது.

    சிவா மனசுல சக்தி

    சிவா மனசுல சக்தி

    ஜீவா-அனுயா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' தான் ராஜேஷை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. சுருக்கமாக எஸ்எம்எஸ் என்று பெயர் வைத்து இளைஞர்களைக் கவர்ந்த இப்படத்தில், ஜீவா எங்காவது ஒரு பாரில் அமர்ந்து மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இருந்தாலும் சந்தானத்தின் காமெடி, ஆர்யாவின் சிறப்புத் தோற்றம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற விஷயங்கள் படத்தைக் ஹிட்டடிக்க வைத்தது.

    பாஸ் என்கிற பாஸ்கரன்

    பாஸ் என்கிற பாஸ்கரன்

    தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' ஆகிய படங்களிலும் தண்ணீரைத் தாரளமாகவே ஓட விட்டிருந்தார்.

    வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

    வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

    ராஜேஷின் படங்களில் அதிகம் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது சிவா மனசுல சக்தியா? இல்லை வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்களா? என்று போட்டி ஒன்றை நடத்தலாம். அந்தளவுக்கு இந்த 2 படங்களிலும் குடிக்கும் காட்சிகளை தாராளமாக வைத்திருந்தார். தமிழகத்தில் டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்ற நேரத்திலும், 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' படத்தை வெளியிட ராஜேஷ் தயங்கவில்லை. அந்தளவுக்கு ராஜேஷின் டாஸ்மாக் பற்று இருந்தது.

    கடவுள் இருக்கான் குமாரு

    கடவுள் இருக்கான் குமாரு

    தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக கூறினால் 'கிக்' என்று வருகிறது. எனவே இப்படத்திலும் ராஜேஷ் தன்னுடைய டாஸ்மாக் பாசத்தைக் காட்டியிருப்பர் என்று தாராளமாக நம்பலாம்.

    சந்தானம் + டாஸ்மாக்

    சந்தானம் + டாஸ்மாக்

    ராஜேஷ் கதையை எழுதும்போதே படத்தில் சந்தானத்திற்கும், டாஸ்மாக்கிற்கும் சமமாக காட்சிகளை அமைத்திருப்பார். ஆனால் ஹீரோ ஆசையால் சந்தானம் கழன்று கொள்ள, ஆர் ஜே பாலாஜியை வைத்து அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். ஒருவேளை பூரண மதுவிலக்கும் தமிழகத்தில் வந்துவிட்டால்? பார்க்கலாம்.

    English summary
    Suppose Prohibition in Tamil Nadu, Rajesh Movies More Affected. Because his Movies based Bar Scenes Only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X