»   »  2015 ன் விருப்பமான நடிகர்: அஜீத், விஜய்யை வீழ்த்தி முன்னுக்கு வந்த தனுஷ்

2015 ன் விருப்பமான நடிகர்: அஜீத், விஜய்யை வீழ்த்தி முன்னுக்கு வந்த தனுஷ்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்தாண்டில் ரசிகர்களின் விருப்பமான நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த வருடம் ரசிகர்களின் விருப்பமான நடிகர் யார்? என்ற கருத்துக்கணிப்பை பிரபல ஆங்கில நாளிதழ் நடத்தியது.தென்னிந்தியளவில் அனைத்து பிரபலமான நடிகர்களின் பெயரும் இந்தக் கருத்துக்கணிப்பில் இடம்பெற்றது.

Most Desirable Hero in 2015

இந்நிலையில் விஜய், அஜீத், விக்ரம் என்று பிரபல நடிகர்கள் அனைவரையும் பின்தள்ளி, தனுஷ் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறார்.

தனுஷ், சூர்யா, விஜய், அஜீத், விக்ரம் என்று இந்தக் கருத்துக் கணிப்பில் முதல் 5 இடங்களை தமிழ் நடிகர்களே கைப்பற்றியுள்ளனர்.

கடந்தாண்டு 8 வது இடத்தைப் பிடித்த விஜய் இந்த வருடம் 3 வது இடத்திற்கு முன்னேற, அதேநேரம் நம்பர் 1 இடத்திலிருந்து அஜீத் 4 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

அதேபோல மற்றொரு ஆச்சரியமாக இளம் நடிகர்கள் பலரையும் பின்னுக்குத்தள்ளி அரவிந்த் சாமி இந்தப் பட்டியலில் 9 வது இடத்தைக் கைப்ற்றியுள்ளார்.

நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
2015:Most Desirable Hero List - Dhanush, Surya, Vijay, Ajith, Vikram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos