»   »  எத்தனை காதல் வந்தாலும் இன்னும் சிங்கிள் தான்.. கெத்து காட்டும் நட்சத்திரங்கள்

எத்தனை காதல் வந்தாலும் இன்னும் சிங்கிள் தான்.. கெத்து காட்டும் நட்சத்திரங்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தக் காதலர் தினத்தை உலகமே இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவர் மனத்திலும் மன்மதன் தன்னுடைய கணைகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரம் நீ இல்லை என்றால் நான் இல்லை, நீதான் என் உலகமே என்று பக்கம் பக்கமாக படங்களில் வசனம் பேசிய நட்சத்திரங்கள் பலர் இன்னும் சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் இவர்களில் பலருக்கும் ஏகப்பட்ட காதல்கள் வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் சிங்கிள் என்று சொல்லிக் கொள்வதில் தான் இவர்களின் சந்தோஷமே அடங்கி இருக்கிறது போலும்.

அப்படி சிங்கிளாகவே இன்னும் கெத்து காட்டும் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

சல்மான் கான்

பிரிக்க முடியாதது சல்மானையும், காதலையும் என்று சொல்லும் அளவிற்கு சல்மானின் காதல்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப்,கிளாடியா சிஸ்லா,ஸரீனா கான் மற்றும் மகக் சஹல் என்று பல நடிகைகளை காதலித்து அவர்களை புகழ் வாய்ந்தவர்களாக மாற்றிய பெருமை சல்மானையே சேரும். எனினும் 50 வயதைத் தாண்டிய சல்மான் இந்த காதலர் தினத்திலும் சிங்கிளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாரா வாழ்க்கையில் இதுவரை சிம்பு, பிரபுதேவா என்று காதல் மற்றும் காதலர்கள் வந்து சென்றுள்ளனர். 3 வதாக இயக்குநர் விக்னேஷ் சிவனை விரும்புவதாகக் கேள்வி. எனினும் இதுகுறித்து முறையான எந்த அறிவிப்புகளும் இன்றுவரை வெளியாகவில்லை. இந்தக் காதலர் தினத்தை நயன்தாரா தனியாக கொண்டாடினாரா? இல்லை விக்னேஷ் சிவனுடனா? என்பதை அவரே சொன்னால் தான் உண்டு.

த்ரிஷா

முதலில் ராணாவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை என்று பிரிந்தனர். மீண்டும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் ஏற்பட்ட காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனது. தற்போது ராணாவுடன் சுற்றுகிறார் என்று கூறினாலும் த்ரிஷா இன்னும் சிங்கிள் தான்.

ஆர்யா

உடன் நடிப்பவர்களை பிரியாணி கொடுத்தே கவிழ்த்து விடுவார் என்று ஆர்யாவைப் புகழாதவர்களே இல்லை. ஆரம்ப காலத்தில் பூஜாவை விரும்பினார் என்று அரசல்புரசலாக செய்திகள் அடிபட்டன. தற்போது உடன் நடிக்கும் எல்லா நடிகைகளுடனும் கிசுகிசு வருவதால் யாரைக் காதலிக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த 33 வயதிலும் ஜாலி பாயாக வலம்வந்து கொண்டிருக்கிறார் ஆர்யா.

சிம்பு

நயன்தாரா, ஹன்சிகா என்று இவரைக் காதலித்த 2 பேரும் இன்று பேரோடும் புகழோடும் விளங்க, சிம்புவிற்கு படம் வருவதே சோதனையாக இருக்கிறது. இந்தக் காதலர் தினத்திற்கு சிம்பு சிங்கிளாக இருந்தாலும், அடுத்த வருடம் பேமிலி மேனாக மாறிவிடுவார் என்று கூறுகின்றனர் பார்க்கலாம்.

விஷால்

37 வயது முடிந்தாலும் சங்கக் கட்டிடம் கட்டின பிறகுதான் கல்யாணம் என்று இன்னும் சிங்கிளாகவே சுத்திக் கொண்டிருக்கிறார் விஷால். சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலிப்பதாக கூறினாலும், இருவர் தரப்பிலும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா

முதலில் வானம் இயக்குநர் கிரிஷ், பின்னர் பிரபாஸ் என்று அனுஷ்காவைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் கிரிஷைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபாஸின் காதலும் முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர். இதனால் வீட்டில் பார்க்கும் பையனை மணந்து கொள்ளும் முடிவிற்கு அனுஷ்கா வந்திருப்பதாக கேள்வி. இன்னும் சிங்கிளா இருக்கும் ராணிக்கு ராஜா எங்கே இருக்கார்னு தெரியலையாம்.

English summary
Most Love Break-Up Celebrities List - Arya, Nayanthara, Simbu, Vishal, Salman Khan, Anushka and Trisha.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos