»   »  8 தோட்டாக்கள்... எம்எஸ் பாஸ்கரின் அனுபவம்!

8 தோட்டாக்கள்... எம்எஸ் பாஸ்கரின் அனுபவம்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

8 தோட்டாக்கள் பார்த்த அத்தனைப் பேரும் பெரிதும் சிலாகிப்பது எம்எஸ் பாஸ்கரின் அபார நடிப்பைத்தான். இந்தப் படத்தில்தான் எம்எஸ் பாஸ்கரை முழுமையாக உபயோகித்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு சிறந்த நடிப்பு.

Select City
Buy 8 Thottakkal (U) Tickets

படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் எம்எஸ் பாஸ்கர்:


MS Baskar speaks on 8 Thottakkal

படத்தின் இயக்குநரை முதலில் பார்த்தபோது, என் மகனுடைய நண்பனோ என்று நினைத்தேன். 'இல்லை, நான்தான் புரொடக்ஷன் மேனேஜர் நாகராஜ் சொன்ன இயக்குநர் ஸ்ரீகணேஷ்' என்று, அறிமுகப்படுத்திக் கொண்டார்.


முதலில் நான் அவருக்கு சொன்ன அட்வைஸ், உடம்பை தேத்துங்க தம்பி, என்று. ஆனால், அவர் சொன்ன கதையும் என் கதாப்பாத்திரமும், அந்த இளைஞர் சொன்ன விதத்தில், உடல் பலத்தைவிட தன்னுடைய மூளை பலம் அதிகம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.


சொன்னது போலவே படத்தையும் அருமையாக எடுத்து, எனக்கும், அதில் நடித்த எல்லோருக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுத்து, எல்லோரது மனதிலும் நின்றுவிட்டார்.


என் மகனாக நான் ஏற்றுக் கொண்ட அந்த இளைஞனுக்கு, மேலும் கற்பனை வளத்தையும், நிறைய படங்களையும் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


படத்தில் பங்கேற்ற நடிகர் சங்க தலைவர், என்னுடைய மாமா, நாசர் அவர்களுக்கும், படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ஐயா மு.வெள்ளைப்பாண்டி அவர்களுக்கும், அவரது மகன், கதாநாயகன் வெற்றி அவர்களுக்கும், லைன் புரொடியூசர் கார்த்திக் அவர்களுக்கும், அருமை சகோதரர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி," என்றார் எம்எஸ் பாஸ்கர்.

English summary
Actor MS Baskar, who plays a key role in 8 Thottakkal sharing his experience.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos