twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருமுகன்.. கமர்ஷியல் + விக்ரம் ட்ரேட் மார்க்!

    |

    -முத்து சிவா

    ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் ஒரு வட்டம் இருக்கு. அதுவும் அவங்களா போட்டுக்குறது. அவரோட படம்னா இப்டித்தான் இருக்கும்னு மக்கள் மனசுல பதிய வைக்கிற மாதிரியான வட்டத்த ஹீரோக்களோட ஆரம்ப கால படங்கள் போட்டு விட்டுருது. அதுக்கப்புறம் மக்களோட எதிர்பார்ப்பும் அதே வட்டத்துக்குள்ளயே இருக்க, பின்னால அந்த ஹீரோவே வட்டத்த விட்டு வெளில வரனும்னாலும் முடியாது. விக்ரம பொறுத்த வரையில் அந்த வட்டம் கொஞ்சம் பெருசு. அவரோட ரீ எண்ட்ரீக்கு பிறகு அவர் கொடுத்த படங்கள் மூலமா அவர கம்ளீட் ஆக்‌ஷன் மசாலா ஹீரோவாகவும் நம்மால ஏத்துக்க முடியும். கதையோட ஒன்றி நடிக்கிற சாமான்ய நடிகனாகவும் ஏத்துக்க முடியும்!

    கடைசியா இவரு ஒரு க்ளீன் ஹிட் அடிச்சி பல வருஷம் ஆச்சு. எனக்குத் தெரிஞ்சி சாமி தான் கடைசின்னு நினைக்கிறேன். அந்நியன் கூட நிறைய பேருக்கு திருப்தியைத் தரலைன்னு தான் சொல்லனும். இவரு கஷ்டப்பட்டு கெட்டப்பெல்லாம் மாத்தி நடிச்சி ஒரு ஃப்ளாப் குடுத்துட்டு அடுத்து கொஞ்சம் relaxed ah ஒரு நார்மல் படம் நடிப்பாரு. ஆனா அதுவும் டஸ் ஆயிரும். அந்நியனுக்கு அப்புறம் மஜா, ஐ க்கு அப்புறம் பத்து என்றதுக்குள்ளன்னு காணாமப் போன படங்கள் எத்தனையோ.

    Muthu Siva's article on Iru Mugan

    இப்ப வந்திருக்க இந்த இருமுகன் எந்த ரகம்? கமர்ஷியல் சமாச்சாரமும் இருக்கனும் அதே மாதிரி விக்ரம்ங்குற ட்ரேட் மார்க்கும் படத்துல இருக்கணும்ங்குறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தான் இருமுகன்னு சொல்லலாம். படத்தின் சுவாரஸ்யங்கள் எதையும் இங்க போட்டு உடைக்கப்போவதில்லை என்பதால் பயப்படாம தொடர்ந்து படிக்கலாம்.

    என்னைப் பொறுத்த வரை கடந்த சில ஆண்டுகள்ல வெளிவந்த விக்ரம் படங்கள்ல பெஸ்டு இருமுகன் தான். எந்தக் காட்சியுமே அறுக்கல, கடுப்பேத்தல. ஒரு சில சுமார் மற்றும் முன்கணிக்கிற மாதிரி காட்சிகளைத் தவிற மற்றபடி படத்துல குறைன்னு எதுவும் இல்ல.

    கதையெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட நாடாவ கொஞ்சம் வித்யாசமா சொருகிருக்காங்க. மலேசியாவுல இந்தியன் எம்பஸி விநோதமான முறையில தாக்கப்பட, நாலு வருஷத்துக்கு முன்னால சஸ்பெண்ட் செய்யப்பட்ட RAW ஏஜெண்ட் விக்ரம்ம மறுபடியும் அந்த கேஸ விசாரிக்கிறதுக்காக கூட்டிட்டு வர்றாங்க.

    விக்ரம் ட்யூட்டில இல்லாததால, ஆஃபீசர் நித்யாமேனனுக்கு அஸிஸ்டண்டுன்னு சொல்லி ரெண்டு பேரயும் மலேசியாவுக்கு இன்வெஸ்டிகேஷனுக்காக அனுப்பி வைக்கிறாங்க. ஆஃபீசர் நித்யா மேனன்னு சொன்னதும் 'யா யா' படத்துல டொப்பி மூக்கிய பாத்து சந்தானம் 'டைனிங் டேபிள் ஹைட்டுல இருக்க உன்னையெல்லாம் எப்புடி போலீஸ் வேலைக்கு எடுத்தாங்க' ன்னு சொல்ற டயலாக் உங்க மனசுல வந்து போச்சுன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

    அப்புறம் இன்வெஸ்டிகேஷங்குற பேர்ல நாலு பேர விசாரிச்சி வில்லன நெருங்குனா, அந்த வில்லன் யாருன்னு ட்ரெயிலர் பாத்த எல்லாருக்குமே தெரியும். வில்லன பாத்தப்புறம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வித்தைய இறக்க, கடைசில எப்புடியும் தர்மம்தான் வெல்லும்னு வாழ்க்கையில ஒரே ஒரு தமிழ்ப்படம் பார்த்தவனுக்கு கூடத் தெரியும்.

    படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் ரெண்டு விஷயம். ஒண்ணு ஆர்டி ராஜசேகரோட ஒளிப்பதிவு. சிறப்பா இருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமும் பயங்கர ரிச்சா இருக்கு. மலேசியாவ செமையா காமிச்சிருக்காங்க. செம கலர்ஃபுல்லா இருக்கு. 'ஹெலெனா..' பாட்டெல்லாம் விஷூவலா ரொம்ப நல்லா இருக்கு. ஆனா மீசையில்லாத விக்ரம்-நயந்தாரா ஜோடிதான் சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன் மாதிரி!

    படத்துக்கு இன்னொரு ப்ளஸ் இன்னும் சொல்லப்போனா இன்னொரு ஹீரோன்னு கூட ஹாரிஸ் ஜெயராஜ சொல்லலாம். உண்மையிலயே பின்னணி இசை நல்லா இருக்கு. பாட்டு ஆல்பத்துல ரிலீஸ் பண்ண அதே மியூசிக் தான். ஆன தியேட்டர் சவுண்ட் எஃபெக்ட்டுக்கு செம்மையா இருக்கு. அதுவும் 'இருமுகன் சேட்டை' பாட்டு ஆரம்பிக்கிறப்போ ஒரு செகண்ட் புல்லரிச்சிருச்சி. பின்னணி இசைக்காகவே இன்னொருக்கா போகலாமான்னு வேற யோசிச்சிட்டு இருக்கேன்.

    ஆனந்த் ஷங்கரோட திரைக்கதை இயக்கம் நல்லாவே இருக்கு. எங்கயுமே படம் ரொம்ப இழுவையா இல்ல... ரொம்ப போர் அடிக்கவும் இல்லை.

    காஸ்டிங்க்ல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம். குறிப்பா தம்பி ராமைய்யா கேரக்டருக்கும், கருணாகரன் கேரக்டருக்கும் வேற யாரையாவது போட்டுருக்கலாம். தம்பி ராமைய்யா காமெடி ரோல்ங்குறதுக்காக மலேசியா போலீஸ் ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டும் கும்கில பயந்து சாகுறது மாதிரியே இதுலயும் நடிக்க வச்சிருக்கது சுத்தமா அந்த கேரக்டரோடவே ஒட்டல. ஆனாலும் ஒரு சில இடங்கள்ல லேசா சிரிப்ப வரவழைக்கிறாரு. கருணாகரன் கேரக்டரும் அப்டித்தான். சீரியஸா யாரையோ எதிர்பாத்தா அங்க கருணாகரன் நின்னுகிட்டு இருக்காப்ள.

    ஒரு சில சீரியஸ் காமெடிகளும் அங்கங்க இருக்கு. ஆனா இது லாஜிக் பார்க்க வேண்டிய படம் இல்லை. அதனால அதப்பத்தி ரொம்ப விளாவாரியா இறங்கி அலசத் தேவையில்லை.

    விக்ரம் வழக்கம்போல மேக்கப் போடுவதற்கு ஆறு மணி நேரம் செலவிட்டார். சாப்பிடாமால் மேக்கப் போட்டார்ன்னு நிறைய பேர் விக்ரமோட உழைப்ப காரணமா காட்டி படத்த சப்போர்ட் பண்ண கிளம்புவாங்க. ஆனா உண்மையிலயே படத்த காப்பாத்துறது கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு லேடி மாதிரி நடிச்ச விக்ரம் இல்லை. சாதாரண மேக்கப்ல தாடியோட RAW ஏஜெண்ட்டா வர்ற விக்ரம்தான். ஆனா வில்லன் விக்ரம் கேரக்டர்ல விக்ரம் நடிக்காம வேற யாராவது ஒரு பெரிய நடிகர் நடிச்சிருந்தா படம் வேற லெவல்ல இருந்துருக்கும்.

    இந்தபடத்துல கிட்டத்தட்ட விக்ரமுக்கான ஆக்‌ஷன் ப்ளாக்க கரெக்ட்டா குடுத்துருக்காங்க. ஆனா சரியான காமெடியனும் காமெடி ட்ராக்கும்தான் அமையல.

    ஆனாலும் பெருசா ஒண்ணும் மோசம் போயிடல. வழக்கம்போல இணைய மக்கள் அடித்து விடுறது மாதிரி படம் மொக்கையெல்லாம் இல்லை. கண்டிப்பா சமீபத்துல வந்த விகரம் படங்கள்ல விஷூவல், மியூசிக், ஆக்‌ஷன்னு எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட். கண்டிப்பா பாக்கலாம். நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டர்ல பாத்தீங்கன்னா இன்னும் சிறப்பு!

    English summary
    Muthu Siva's article on Vikram's recent release Iru Mugan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X