twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல நண்பன் வேண்டும் என்று மரணமும் நினைக்கின்றதா: எதை நினைத்து எழுதினீங்க முத்துக்குமார்?

    By Siva
    |

    சென்னை: பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல் வரிகள் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கும்.

    2 தேசிய விருதுகள் பெற்ற பாடல் ஆசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் தனது 41வது வயதில் இன்று மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    அவர் மறைந்தாலும் அவரின் பாடல் வரிகள் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கும். அவர் படைப்பில் ஒரு சில,

    ஆனந்த யாழை

    தங்க மீன்கள் படத்திற்காக ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற வெற்றிப் பாடலை எழுதியவர் முத்துக்குமார். இந்த பாடலுக்காக அவருக்கு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது.

    சைவம்

    சைவம்

    சைவம் படத்தில் வரும் அழகே பாடலை அழகாய் எழுதிய முத்துக்குமாருக்கு இரண்டாவது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    காதல் கொண்டேன்

    காதல் கொண்டேன்

    நெஞ்சோடு கலந்திடு உறவாலே
    காலங்கள் மறந்திடு அன்பே
    நிலவோடு தென்றலும் வரும் வேளை
    காயங்கள் மறந்திடு அன்பே ...

    7ஜி ரெயின்போ காலனி

    கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
    காத்திருந்தால் பெண் கனிவதில்லை
    ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
    கண்ணாடி இதயமில்லை
    கடல் கைமூடி மறைவதில்லை

    தலைவா

    தலைவா

    விஜய் நடித்த தலைவா படத்தில் வரும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனது. அந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் முத்துக்குமார்.

    நண்பன்

    நல்ல நண்பன் வேண்டும் என்று
    அந்த மரணமும் நினைக்கின்றதா
    சிறந்தவன் நீதான் என்று
    உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா ...

    இந்த பாடலை எதை நினைத்து எழுதினாரோ தெரியவில்லை.

    7ம் அறிவு

    7ம் அறிவு

    முன் அந்தி சாரல் நீ
    முன் ஜென்ம தேடல் நீ
    நான் தூங்கும் நேரத்தில் தொலை
    தூரத்தில் வரும் பாடல் நீ

    7ம் அறிவு படத்தில் வந்த இந்த பாடல் வரிகளை முணுமுணுக்காதோரே இல்லை.

    தெய்வத் திருமகள்

    தெய்வத் திருமகள்

    ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
    பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

    தாயாக தந்தை மாறும் புது காவியம்
    ஓ...இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
    இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே

    இந்த பாடலை பாடும்போதே கண்ணில் கண்ணீர் முட்டுகிறதே முத்துக்குமார்

    சிங்கம்

    சிங்கம்

    என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
    இப்போ துடிக்கிறதே
    என் மனசு இதுவரை பறந்ததில்லை
    இப்போ பறக்கிறதே
    இது எதனால் எதனால் தெரியவில்லை
    அதனால் பிடிக்கிறதே

    பையா

    அடடா மழைடா அட மழைடா
    அழகா சிரிச்சா புயல் மழைடா
    அடடா மழைடா அட மழைடா
    அழகா சிரிச்சா புயல் மழைடா

    பையா படத்தில் வரும் இந்த பாடலுக்கு நண்டுசுண்டு எல்லாம் ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

    அங்காடி தெரு

    அங்காடி தெரு

    அங்காடி தெரு படத்தில் வரும் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை
    அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
    ஆனால் அது ஒரு குறையில்லை என்ற பாடல் வரிகளை பாடாத இளைஞர்களே இல்லை என்று கூற வேண்டும்.

    மதராஸபட்டினம்

    பூக்கள் பூக்கும் தருணம்
    ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
    புலரும் காலை பொழுதை
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே
    நேற்றுவரை நேரம் போகவில்லையே
    உனது அருகே நேரம் போதவில்லையே

    English summary
    Lyricist Na. Muthukumar has left this world but his golden words will speak about him forever.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X