twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் அணியைத் தூண்டிவிடுவதே கமல் தான்- சரத்குமார்

    By Manjula
    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஷால் தலைமையிலான அணியினரை தூண்டி விடுவதே கமல் தான் என்று சரத்குமார் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    சரத்குமாரின் இந்தப் பேச்சு தமிழ்த் திரையில் தற்போது மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமார் மற்றும் விஷால் தலைமையிலான அணியினர் போட்டியிடுகின்றனர்.

    வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் கமல் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

    நடிகர் சங்கத் தேர்தல்

    நடிகர் சங்கத் தேர்தல்

    நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

    2 அணியினரும்

    2 அணியினரும்

    சரத்குமார் மற்றும் விஷால் தலைமையிலான 2 அணியினரும் தங்கள் வேட்புமனு தாக்கலை நேற்று மாலையுடன் முடித்துக் கொண்டனர். தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி வெளியிடப்படும்.

    சரத்குமார்

    சரத்குமார்

    இந்நிலையில் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், விஷால் அணியினரைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    விஸ்வரூபம்

    விஸ்வரூபம்

    கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படப் பிரச்சினையின் போது அவர் நாட்டை விட்டே செல்வதாகக் கூறினார். அந்தப் படத்தின் பிரச்சினையின் போது பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து படம் வெளிவர நான் கடுமையாக உழைத்திருக்கிறேன்.

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    இதே போன்று உத்தமவில்லன் படத்தின் போதும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு பிரச்சினைகள் எழுந்தபோது நான் சுமார் 36 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தேன். நன்றியை எதிர்பார்த்து நான் இவற்றை செய்யவில்லை எனினும் இதுவரை ஒரு நன்றியைக் கூட கமல் என்னிடம் கூறியதில்லை. தற்போது இந்த நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணியினரை எனக்கு எதிராக அவர் தூண்டிவிடுகிறார் என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கமல் மீது கடுமையான குற்றச்சாட்டை சரத்குமார் வைத்திருக்கிறார்.

    இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் எந்தவித அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nadigar Sangam Elections: "Kamal Haasan is ungrateful, I have personally worked hard for him. He should ask his conscience. Has he even thanked me for it? He must think about it.When the Uttama Villain controversy was on, I worked for 36 hours without sleep to make sure the movie released - says Sarathkumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X