»   »  'நடிகர் சங்கம் க்ளப் கிடையாது... சேவை பிடிக்கவில்லை என்று விலக!' - விஷால்

'நடிகர் சங்கம் க்ளப் கிடையாது... சேவை பிடிக்கவில்லை என்று விலக!' - விஷால்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் சிம்பு கூறியிருப்பது அவர் கருத்து... ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் க்ளப் கிடையாது, சேவை பிடிக்கவில்லை என்று விலக, என்று விஷால் கூறினார்.

இன்று நடிகர் சங்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Nadigar Sangam is not a club, says Vishal

நடிகர் சங்க பொதுச் செயலர் விஷாலிடம், நடிகர் சிம்பு சங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறியுள்ளது பற்றிக் கேட்கப்பட்டது.

அதற்கு விஷால் அளித்த பதில்:

நடிகர் சங்கத்திலிருந்து விலகுவது குறித்து சிம்பு அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் எந்த வகை உதவியையும் எங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் உதவச் சென்றபோதும் நானே பார்த்துக் கொள்வேன் என்று கூறிவிட்டார். இதில் சங்கத்தின் மீது வருத்தம் கொள்ள காரணமே இல்லை.

நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப்போ, லீ கிளப்போ கிடையாது. சேவை பிடிக்கவில்லை என்று விலக முடியாது.

சிம்புவின் கருத்தை மதிக்கிறேன். ஒரு நடிகராக சிம்புவை எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றார்.

English summary
Nadigar Sangam secretary Vishal says that Simbu couldn't quit from Nadigar Sangam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos