»   »  தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு நல்லதாப் போச்சு

தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு நல்லதாப் போச்சு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் லேட்டஸ்ட் காதலால் அவருக்கும், தனுஷுக்கும் இடையேயான நட்பு பகையாக மாறியுள்ளது.

தனுஷும், நயன்தாராவும் நண்பர்கள் என்பது கோடம்பாக்கம் அறிந்த செய்தி. தம்பி சிவகார்த்திகேயனை வைத்து அண்ணன் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நயன்தாரா ஆடினார். நயன் ஒரு குத்தாட்டம் போடுங்களேன் என்று தனுஷ் கேட்டதன்பேரில் தான் அவர் ஆடினார்.

நயன்தாராவை அழைத்து வந்து அவரே ஆடிவிட்டு சென்றுவிட்டார் என தனுஷ் மீது சிவாவுக்கு லைட்டாக வருத்தம் இருந்தது.

நானும் ரவுடி தான்

விஜய் சேதுபதியை வைத்து தான் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தில் நடிக்குமாறு தனுஷ் நயன்தாராவிடம் கேட்டார். அம்மணியோ நண்பனுக்காக சம்பளம் பற்றி கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்.

காதல்

நானும் ரவுடி தான் படப்பிடிப்பின்போது நயனுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூட கூறப்படுகிறது.

இடையூறு

நயன் விக்னேஷுடன் நெருக்கம் காட்ட காட்ட அவருக்கும் தனுஷுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. தனுஷால் நயன்தாராவை சந்திக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு முறை தனுஷ் நயனை சந்திக்க வந்து அங்கு விக்னேஷ் இருந்ததால் முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் தனுஷுக்கு நயன் மீது கோபம்.

தனுஷ்

இந்த நயனும், விக்னேஷும் படப்பிடிப்பில் கவனம் இல்லாமல் இருந்ததால் பட்ஜெட் அதிகரித்துவிட்டது என்று தனுஷ் தெரிவித்தார். இதை கேட்டு கடுப்பான நயன் எவ்வளவு அதிகரித்ததோ அதை கூறுங்கள் நான் பணத்தை தருகிறேன் என்றார்.

நானும் ரவுடி தான்

நானும் ரவுடி தான் படம் என்னமோ ஹிட்டு தான். ஆனால் தனுஷோ படத்தால் தனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்று கூறி வருகிறார்.

சமந்தா

நயன்தாராவுடனான நட்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்ததாக அவரின் கவனம் சமந்தா பக்கம் திரும்பியுள்ளது. சமந்தா நல்ல பொண்ணு, நல்ல நடிகை என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறாராம் தனுஷ்.

English summary
Dhanush is reportedly no longer Nayanthara's good friend because of her closeness with director Vignesh Shivan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos