» 

நயனதாரா பேசியதைக் கேட்டு ஜெய்க்கு கண்ணெல்லாம் வியர்த்துப் போச்சாம்!

Posted by:
 

சென்னை: ராஜா ராணி படத்தைப் பார்த்த நயனதாரா, அதில் நடித்த நாயகர்களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டித் தள்ளி விட்டாராம்.

உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய்ய ஆளா வருவே என்று மனம் விட்டுப் பாராட்டினாராம் நயனதாரா.

நயனதாராவின் பேச்சையும், பாராட்டையும் ஜெய்க்கு அப்படியே... சந்தோஷமாகி விட்டதாம்.

2 ராஜா.. 2 ராணி

நயனதாரா, நஸ்ரியா, ஆர்யா, ஜெய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ராஜா ராணி.

பல படங்களின் மிக்ஸர் என்றாலும்...

பல சூப்பர் ஹிட் படங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள் என்று சலசலப்பு நிலவினாலும் கூட ரசிகர்களைக் கவர்ந்து விட்டது இந்த ராஜா ராணி.

ஜெய்யைப் பாராட்டிய நயனதாரா

இந்தப் படத்தில் நயனதாராவும், ஆர்யாவும் தான் முதன்மையான ஜோடி என்றாலும் ஜெய்தான் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் நடிப்பில் என்பது பலரது பாராட்டாக உள்ளது. அதை நிரூபிப்பது போல நயனதாராவே ஜெய்யைப் பாராட்டியுள்ளாராம்.

நல்லா வருவே...

ஜெய்யிடம், என்னைச் சுற்றித்தான் கதை என்ற போதிலும் நீ சம்பந்தப்பட்ட போர்ஷன்தான் செம அழகாக வந்திருக்கு. நீ நல்லா வரவே என்று மனம் விட்டு நயனதாரா பாராட்டியதைக் கேட்டு ஜெய்க்கு கண்ணெல்லாம் 'வியர்த்து'ப் போய் விட்டதாம்...!

சூப்பரப்பு...!

 

Read more about: nayanthara, jaya, raja rani, நயனதாரா, ஜெய், ராஜா ராணி
English summary
Nayanthara has praised actor Jai for his portion in the movie Raja Rani.

Tamil Photos

Go to : More Photos