»   »  முத்துராமலிங்கம்.... 'களமிறங்கினார்' நெப்போலியன்!

முத்துராமலிங்கம்.... 'களமிறங்கினார்' நெப்போலியன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, தமிழில் தலா ஒரு படத்தை சமீபத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்ற நெப்போலியன், தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

Nepoleon in Muthuramalingam

திரும்பிய கையோடு அவர் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் படம் முத்துராமலிங்கம்.

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்கும் இந்தப் படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.

பெரிய மீசையுடன் தெக்கத்தி பெரிய மனிதராக வரும் நெப்போலியனுக்கு ஜோடியாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. நெப்போலியன், கௌதம் கார்த்தி, விஜி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

English summary
Former Union Minister Nepoleon is shifting his interest in acting again. Recently he has signed a Tamil movie Muthuramalingam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos