»   »  சூரி பிரமாதம்.. டிரைவர் சுமார்.. பேய் இம்ப்ரூவ் பண்ணனும்... திகில் வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சூரி பிரமாதம்.. டிரைவர் சுமார்.. பேய் இம்ப்ரூவ் பண்ணனும்... திகில் வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூரி பழனி சாலையில் பேயை நிஜத்தில் சந்தித்ததாக தனது அனுபவத்தை வீடியோவுடன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், அதனைக் கலாய்த்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் முன்னணி காமெடி நாயகர்களுள் ஒருவராக வலம் வரும் சூரி, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் நிஜப் பேயைப் பார்த்த அனுபவத்தை விளக்கியிருந்தார்.

அதாவது நேற்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் கோவை-பழனி நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே பேயைப் பார்த்தாராம் சூரி. உடனடியாக தனது டிரைவரிடன் காரின் விளக்குகளை அணைத்து விட்டு அந்த உருவத்தின் மீது மோதச் சொல்கிறார். இவை அனைத்தும் ஆடியோவாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், சூரியின் இந்த வீடியோவைப் பார்த்து அரண்டவர்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் நெட்டிசன்கள் கலாய்ச்சிபை செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார் சூரியிடம். அவை என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...

'டிரைவர் சொல்லிக் குடுத்த டயலாக்கை கரெக்டா சொல்லிட்டாப்ல... ஆனா டைமிங் தான் மிஸ் பண்ணிட்டாரு...
1. நைட்ல எதுக்கு கேமரா ஆன் பண்ணி வச்சிருந்தீங்க?
2. அது பேய்னு எப்டி தூரத்துல இருக்கும்போதே தெரியும்?
3. நீங்க அடிச்சி தூக்குனு பேசிட்டு இருக்கும்போதே, மேக்கப் போட்ட பேய் கார்ல ஏறி கிளாஸ்கு முன்னாடி படுத்துருக்கு. அது அப்டியே தெரியுது.
4. அந்த டைமிங்காக தா நீங்க லைட்ட ஆப் பண்ணி இருக்கீங்க
ஓவர் ஆல்-ஆ சூரி நடிப்பு பிரமாதம், டிரைவர் நடிப்பு சுமார், பேய் வேசம் போட்டவர் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனும்' என அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil cinema actor and comedian shared a paranormal encounter on Facebook and alleged that he saw a ghost on a highway. The netizens are teasing this video.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos