»   »  நகுலின் காதலுக்கு சங்கு ஊதப் பார்க்கும் 'நாரதன்' பிரேம்ஜி அமரன்

நகுலின் காதலுக்கு சங்கு ஊதப் பார்க்கும் 'நாரதன்' பிரேம்ஜி அமரன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டொட டொடவென பேசும் பிரேம்ஜி அமரனுக்கு நாரதன் படத்தில் பொருத்தமான கதாபாத்திரத்தை அளித்துள்ளனர்.

நகுல், நிகேஷா பட்டேல், சோனு, பிரேம்ஜி அமரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாரதன். நாகா வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தது வேறு யாரம் அல்ல நம் தமிழக ஆளுநர் ரோசையா தான்.


இப்பொழுது இந்த படம் நினைவுக்கு வருகிறதா. அதே தான், அந்த படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.


நாரதன்

நாரதன் என்றால் என்ன? அவர் செய்யும் குழப்பங்கள் நன்மையில் முடியும். நாரதன் படத்தில் அந்த வேலையை செய்துள்ளது நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன். அவருக்கு ஏற்ற கதாபாத்திரமாகவே கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.


கலகம்

நகுலையும், நிகேஷாவையும் பிரிக்க ரூம் போட்டு யோசித்து கலகம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரேம்ஜி. ஆனால் அவர் செய்யும் பிரச்சனைகளால் நகுல், நிகேஷா காதல் இன்னும் பலமாவது தான் கதை.


ஹீரோயின்கள்

நாரதன் படம் துவங்கவிருந்த போது நான் தான் ஹீரோயின், இல்லை நான் தான் ஹீரோயின், அவர்கள் இருவருமே இல்லை நான் தான் ஹீரோயின் என பெங்களூர் மாடல் தீப்தி மோகன், ஹர்ஷிகா பூனாச்சா, சோனு கௌடா ஆகியோர் தெரிவித்தனர். அடடா இப்பவே தலையை சுத்துதே இதில் யார் தான் ஹீரோயின் என்று குழம்பியபோது நிகேஷா தான் ஹீரோயின், சோனு இரண்டாவது நாயகி என்று கூறி தெளிவடைய வைத்தார் நாகா வெங்கடேஷ்.


பவர் ஸ்டார்

நாரதன் படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் வேறு உள்ளாராம். இந்த தகவலை பிரேம்ஜி அமரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். படத்தில் பவர் பிறரை வைத்து காமெடி செய்கிறாரா இல்லை அவரை வைத்து பிறர் காமெடி செய்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


நிகேஷா

அமளி துமளி படத்தில் நகுலுக்கு ஜோடியாக நிகேஷா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் நாரதன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். தொடர் தோல்விகளுக்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் ஓடியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் நகுல்.


English summary
Nakul's Narathan is getting ready to hit the screens.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos