»   »  முத்தம், பிகினி சமாச்சாரங்களில் சமரசமே கிடையாது! - தமன்னா

முத்தம், பிகினி சமாச்சாரங்களில் சமரசமே கிடையாது! - தமன்னா

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: முத்தக் காட்சிகள் மற்றும் நீச்சலுடைக் காட்சிகளில் நடிக்கும் விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார் தமன்னா. அவர் நடித்துள்ள பாகுபலி வெளியீட்டை மிகவும் எதிர்ப்பார்க்கிறார்.

தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

மறுப்பு

தமன்னா கவர்ச்சிக் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறார் என்றும், நீச்சல் உடைக்கும் ஓகே சொல்லிவிட்டார் என்றும் சமீபத்தில் வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

 

 

லிப் லாக் - பிகினி

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "சினிமாவில் நடிக்க வரும்போதே இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தேன். அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சியில் நடிக்க கூடாது. நீச்சல் உடையிலும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். இன்று வரை அதைக் கடைபிடித்து வருகிறேன்.

நோ காம்ப்ரமைஸ்

நிறைய தயாரிப்பாளர்களும், இக்குநர்களும் கதைக்கு முத்த காட்சி, நீச்சல் உடை தேவை என்றும் அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தினர். அதனை நான் ஏற்கவில்லை. முத்தம், நீச்சல் உடையில் நடிப்பதற்கு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.

அது அவங்க விருப்பம்

மற்ற கதாநாயகிகள் முத்த காட்சிகளிலும், நீச்சல் உடையிலும் நடிக்கிறார்களே என்று கேட்கலாம். அவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது அவர்களது விருப்பம்.

அழகாக வருவேன்

என்னை பொறுத்தவரை அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறாகப்படுகிறது. எனவேதான் அப்படி நடிக்க கூடாது என்று இருக்கிறேன். நான் அழகான உடைகளில் ரசிக்கும்படி தோன்றுவேன். அதற்கு மறுப்பு சொல்ல மாட்டேன்," என்றார்.

 

 

English summary
Actress Tamanna says that she never compromises for lip lock and bikini scenes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos