twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜபக்சேவுடன் எந்தத் தொடர்பும் இல்லையாம்! - சொல்கிறார் கத்தி தயாரிப்பாளர்

    By Shankar
    |

    சென்னை: எனக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனத்தில் அவர் கூட்டாளியாக இல்லை என்று கத்தி படத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார்.

    ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும், ராஜபக்சேவின் மருமகன் இந்த நிறுவனத்தில் இயக்குநராக பதவி வகிப்பதாகவும் கூறி, கத்தி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது தமிழகத்தில்.

    65 அமைப்புகள்

    65 அமைப்புகள்

    இதற்கான ஆதாரங்களை மீடியா தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இதனால் கத்தி படத்தை தமிழகத்தில் வெளியாக விட மாட்டோம் என்று 65 அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. இது குறித்து முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

    முதல்வரைச் சந்திக்க

    முதல்வரைச் சந்திக்க

    இந்த நிலையில், முதல்வரைச் சந்தித்து தங்கள் படம் தடையின்றி வெளியாக உதவுமாறு கேட்க விஜய் தரப்பில் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு

    தீபாவளிக்கு

    இன்னொரு பக்கம், படத்தின் வேலைகளை முடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். ‘கத்தி' படத்தின் இசை வரும் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.

    சுபாஷ்கரன்

    சுபாஷ்கரன்

    இந்த நிலையில் ‘கத்தி' பட சர்ச்சை குறித்து ‘லைகா' பட நிறுவன அதிபர் சுபாஷ்கரன் கூறுகையில், "கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சேவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எங்களுக்குள் எவ்வித தொழில் தொடர்பும் கிடையாது. நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறினேன்.

    தொடர்பில்லை

    தொடர்பில்லை

    ஐரோப்பிய நாடுகளில் கடந்த 27 வருடமாக தொழில் செய்து வருகிறேன். என் உறவினர்கள் பலர் இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு உள்ளனர். எனவே ‘கத்தி' பட தயாரிப்பாளரான எனக்கும் ராஜபக்சேக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

    ஆதாரங்கள் பொய்யா?

    ஆதாரங்கள் பொய்யா?

    ஆனால் ராஜபக்சே மருமகன் தனது நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பது குறித்தோ, லைகா நிறுவன சட்டையை அணிந்தபடி, அந்த நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ராஜபக்சே மகன் கலந்து கொண்டது குறித்தோ, இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஸ்பான்சராக இருந்தது குறித்தோ அவர் எதுவும் சொல்லவில்லை.

    English summary
    Kaththi movie producer Subashkaran says that he hasn't any connection with Rajapaksa
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X