twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழகத்தில் கவிஞர்களுக்கு மரியாதை இல்லை: பாடலாசிரியர் அறிவுமதி வேதனை

    |

    சென்னை: கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாடலாசிரியர்களுக்கு தரப்படும் மரியாதை கவிஞர்களுக்கு கிடைப்பதில்லை எனக் கவலைத் தெரிவித்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி.

    தேசிய ரத்த தான விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கியவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டில் அதிக ரத்த தானம் செய்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கு சினிமா பாடலாசிரியர் அறிவுமதி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    அதனைத் தொடர்ந்து விழாவில் அறிவுமதி பேசியதாவது :-

    அழகிய நாடு...

    அழகிய நாடு...

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனக்குழுவும் தன்னுடைய மொழியை பேசியும், அவர்கள் உணவை உட்கொண்டும் இருக்கும் வரைதான் உலகின் அழகான நாடாக இருக்கும்.

    தாய்மொழியின் சிறப்பு...

    தாய்மொழியின் சிறப்பு...

    அனைத்து மக்களுக்குமான அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். தாய் மொழிக்குத்தான் பன்முக தன்மையும், சிந்திக்கும் தன்மையும் உண்டு.

    கவிஞர்களுக்கு மரியாதையில்லை...

    கவிஞர்களுக்கு மரியாதையில்லை...

    கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்களிடம் கவிஞர்களை மதிக்கும் பண்பு உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை பாடலாசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை கவிஞர்களுக்கு இல்லை.

    இசையை இழந்த இனம்...

    இசையை இழந்த இனம்...

    எந்த ஓர் இனம் இசையையும், நடனத்தையும் இழந்துவிடுகிறதோ அந்த இனம் அடிமைப்பட்டுத்தான் கிடக்கும்.

    இசை, நடனமே மருந்து...

    இசை, நடனமே மருந்து...

    ஒரு இசைப் பள்ளியை திறந்தால் 10 மனநோய் மருத்துவமனைகளை மூடிவிடலாம். 2 ஆடல் பள்ளிகளை திறந்தால் 200 பொது மருத்துவமனைகளை மூடிவிடலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    The Poet and Lyricist Arivumathi says that their is no respect for poets in Tamilnadu compared to lyricists.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X