»   »  "அவங்க" சண்டையால் "எங்க" நட்பு பாதிக்காது.... சொல்கிறார் வரலட்சுமி

"அவங்க" சண்டையால் "எங்க" நட்பு பாதிக்காது.... சொல்கிறார் வரலட்சுமி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் அப்பா சரத்குமார் தரப்புக்கும், விஷால் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் எனக்கும், விஷாலுக்கும் இடையிலான நட்பு ஒருபோதும் பாதிக்கப்படாது என்று சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரவட்சுமி கூறியுள்ளார்.

வரலட்சுமி - விஷால் காதலிப்பதாகவும், இதுவே சரத்குமார், விஷால் இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த மோதல் ஈகோ பிரச்சினையாகி, கெளரவப் பிரச்சினையாக மாறி இப்போது நடிகர் சங்கமே இரண்டாக பிளந்து போகக் காரணமாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

No rift between me and Vishal, says Varalakshmi

ஊரே கூடி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இரு தரப்பும் ஒருவருக்கொருவர் அசிங்கமாகவும், வாடா போடா என்றும் பேசி நாறிப் போய் விட்டனர். இந்த நிலையில் இன்று தேர்தல் நடந்தது.

தேர்தலில் வாக்களிக்க வந்த வரலட்சுமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்பா சரத்குமார் தரப்புக்குதான் வாக்களித்தேன்.அதேவேளையில் நண்பராக விஷாலுக்கு என் ஆதரவு இருக்கிறது.

இந்த தேர்தல் களேபரங்களால் விஷாலுக்கு எனக்கும் உள்ள நட்பில் எந்த விரிசலும் ஏற்படாது. வெற்றி பெறும் அணியினர் கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும். நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார் வரலட்சுமி.

English summary
Varalakshmi, actress and the daughter of Sarathkumar has said that there will be no rift between her and Vishal due to the clash of the Nadigar sangam election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos