twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா தயாரிக்க விருப்பமா... 'ஓபன் சீஸேம்' உங்களை வரவேற்கிறது!

    By Shankar
    |

    திரைப்பட தயாரிப்பில் ஈடுபட விரும்புகிற - தயாரிப்பு குறித்து போதிய அனுபவமில்லாத புதிய தயாரிப்பாளர்களுக்காக - ‘OPEN SESAME' என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    அது எந்த மாதிரி உதவி?.. இதோ, இயக்குநர் ஆர் ரவிசங்கர் விளக்குகிறார்:

    கனவு தொழிற்சாலை - இது சினிமாவுக்கு ‘சுஜாதா' வெச்ச பெயர்... ரொம்ப சரியான பெயர்...

    Open Seasame, a new venture to help new producers

    கனவுகள் சுகமானவை.. கனவுகளை உற்பத்தி பண்றது அதைவிட சுகமானது.. ஆளா, கனவுலயே இன்னொன்று இருக்கு... ‘கெட்டகனவு'... அதாவது ‘NIGHTMARE'.

    ஆமாம்.... சினிமா ஒரு கனவு... சினிமா எடுக்கறது பெரும் கனவு... ஆனா பலருக்கு அது கெட்ட கனவா மாறிடுது.

    ‘மூணு கோடி ரூபா செலவு பண்ணேன்... பாதி படம் கூட முடியல....

    ‘5 கோடி செலவு பண்ண படம்... ரிலீசுக்கு வழியில்லாம தவிக்குது...

    ‘என்கிட்ட சொன்ன கதை படத்துல வரவே இல்லை.. நான் தயாரிச்ச படத்தை எனக்கே பாக்க பிடிக்கலை....!'

    இது பல புது தயாரிப்பாளர்களின் புலம்பல்கள்.... வெறும் புலம்பல் இல்ல... கோடிகளை இழந்து குமுறும் புலம்பல்.

    ஒரு சின்ன உதாரணம்... கிட்டதட்ட 600 (ஆமாம் ஆறு நூறு!) தமிழ் படங்கள் ரெடியாகி ரிலீசுக்கு காத்ததிருக்கு. அதை விட ரெண்டு மடங்கு தயாரிப்புல இருக்கு... இதுல கிட்டதட்ட எல்லாமே புது தயாரிப்பாளர்.. புது டீம்!

    சினிமா எடுக்கறதை பத்தி எந்த அனுபவமும் இல்லாத தயாரிப்பாளர்கள் பணத்தை போட்டுட்டு கடல்ல கரைச்ச பெருங்காயமாக பணமும் போய் நிம்மதியும் போய் நிக்கற கதைகள் ஒண்ணா ரெண்டா...!

    அதுக்காக ஒட்டு மொத்த சினிமா உலகமே தப்புனு அர்த்தமா? சினிமா எடுக்குறதே தப்புன்னு அர்த்தமா? கிடையவே கிடையாது...

    ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து, ‘இதுக்கு இவ்வளவுதான் செலவாகும்' னு சரியான பட்ஜெட்டை போட்டு சின்ன பட்ஜெட்ல எடுக்க நினச்சதை நினைச்சா மாதிரி எடுத்தாலே பெரும் பிரச்சனைகள் குறையும்.

    அதுக்கான சரியான வழியை காட்டி ‘ இத இத இப்படி பண்ணுங்க... இது இதுக்கு இவ்வளவுதான் செலவாகும்... செலவையும் இப்படித்தான் பண்ணணும்' னு கூட இருந்து எடுத்து கொடுக்கறதுக்கு உருவானதுதான் இந்த ‘OPEN SESAME TEAM'.

    ‘OPEN SESAME ‘ ங்கறது அலிபாபா குகையை திறக்கறதுக்கு சொல்லப்படுகிற மந்திர சொல்...'திறந்துடு சீஸேம்'. சரியானபடி செய்தா சினிமாங்கற அலிபாபா குகையை கண்டிப்பா திறக்க முடியும்... அதுக்கு உதவுவதுதான் எங்க நோக்கம்.

    ஒருத்தருக்கு படம் எடுக்கணும்னு ஆசை... தன் கதையை தானே தயாரிச்சு இயக்கவோ, அல்லது ஒரு நல்ல படத்தை தயாரிக்கவோ ஆசை ஆனால், அவருக்கு சினிமா எடுக்கறதை பற்றி ஏபிசிடி கூடத் தெரியாது.. அப்படிப்பட்ட ஒருத்தருக்கு,. கதையை திரைக்கதை வசனமா படப்பிடிப்புக்கு ஏத்தா மாதிரி உருவாக்கி தருவதிலிருந்து, நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வது, பாடல்- இசை ஒலிப்பதிவு, படப்பிடிப்பு, எடிட்டிங், சிஜி மிக்சிங் என போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் செய்து, சென்சார் சான்றிதழ் வரைக்கும் வாங்கி தந்து ஒரு முழு படத்தை ஒப்பந்த முறையில் முறையில் ஒரு வேலையாக செய்து கொடுப்பது எங்கள் முதல் பணி.

    அல்லது எனக்கே படம் இயக்க ஆசை... அப்பப்ப ஆலோசனைகள் தந்து வழிநடத்தினா போதும்னு சொன்னா அதையும் செய்து தருகிறோம்.

    அல்லது, ‘ எனக்கு இந்த டைரக்ஷன் சமாச்சாரமெல்லாம் வேணாம்.. ஒரு நல்ல படத்தை தயாரிச்சா போதும்னு சொல்றாங்களா அப்படியே ஒரு நல்ல கதையை தேர்வு செய்யவைத்து உருவாக்கித் தருகிறோம்..

    இன்னும் சொல்லப்போனா படம் ரிலீஸ் பண்றதுக்கு உண்டான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம்.

    இது அனைத்தும் ஒப்பந்தம் போடப்பட்டு செய்யப்படும் வேலைகள்- இதில் ‘ பணத்தை போட்டு ஏமாந்து விட்டேன் ' என்ற வேதனைக்கே இடம் இல்லை.

    இந்த அனைத்து விவரங்களும் சுவையான ஒரு வீடியோவாக ஒரு சினிமா ட்ரைலர் மாதிரியே யுட்யூபில் காணக்கிடைக்கிறது.

    காண வேண்டிய தலைப்பு.....

    1. TAMIL MOVIE MAKING OPEN SESAME THE RIGHT WAY (ENG)
    2. TAMIL MOVIE MAKING OPEN SESAME THE RIGHT WAY (TAMIL)

    இந்த ஓபன் சீஸேம் டீமில் உள்ளவர்கள்,

    1.ஜோதிசுந்தர் (ஆர். ரவிஷங்கர்)
    இயக்குனர் - பாடலாசிரியர்.

    இயக்குனர்கள் கே. பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக இருந்தவர்.

    பாடலாசிரியராக, ‘ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' ‘ சலக்கு சலக்கு ‘ ‘ பாரதிக்கு கண்ணம்மா....' ‘ எங்கே அந்த வெண்ணிலா ‘ ‘ நான் ரெடி.... நீங்க ரெடியா ‘ போன்ற பாடல்கள் எழுதியவர்.

    கதை திரைக்கதை வசனம் எழுதி சூப்பர் குட் விலிம்ஸ் ( R.B.செளத்ரி தயாரிப்பில் ) ‘ வருஷமெல்லாம் வசந்தம் ‘ படத்தை இயக்கியவர்.

    2. வி. ஜெய்சங்கர் எடிட்டர்.

    சூப்பர் குட், ஆஸ்கார் பிலிம்ஸ் ஏவிஎம், போன்ற பல வெற்றி பட நிறுவனங்களில் பல வெற்றி படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்... ‘ பூவே உனக்காக , சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, திருப்பாச்சி, சிவகாசி, அரசு ‘ இப்படி பல படங்கள்.

    3. எஸ். அருணாச்சலம் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிர்வாகி

    ஆஸ்கார் பிலிம்ஸ், ஏவிஎம், லட்சுமி மூவி மேக்கர்ஸ், கலைப்புலி.எஸ்.தாணு, என பல வெற்றி பட நிறுவனங்களில் குறிப்பாக இயக்குனர் விக்ரமன் அவர்களின் பல படங்களில் பணியாற்றியவர்.

    4. எஸ். நாகராஜன் - முன்னணி தயாரிப்பு நிர்வாகி

    சூப்பர்குட் பிலிம்ஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் , கவிதாலயா என பல வெற்றி பட நிறுவனங்களிலும் ஷங்கரின் அன்னியன், ஐ, மற்றும் மஞ்சப்பை என பல படங்களில் பணி புரிந்தவர்.

    English summary
    Director R Ravishankr is launching a new team Open Seasame to help new producers and directors in film making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X