twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அசத்துராருய்யா இந்த "சிங்க தாதா" - ட்விட்டரில் நெகிழும் ரசிகர்கள்

    By Manjula
    |

    சென்னை: விஜய் சேதுபதி எழுதி தயாரித்து அவரே நடிக்கவும் செய்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது, தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அரஞ்சு மிட்டாயிலும் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார்.

    இந்தப் படத்தில் 50 வயதைக் கடந்த முதியவராக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி, இதனால் ரசிகர்களின் மத்தியில் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

    காக்கா முட்டை வரிசையில் எதார்த்த படமாக வந்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் இந்த வேளையில், படத்தைப் பற்றி ரசிகர்கள் கொடுத்திருக்கும் கருத்துக்களில் இருந்து சில ட்விட்டர் பதிவுகளை இங்கு காணலாம்.

    புகைபிடிக்கும் காட்சிகளோ மது அருந்தும் காட்சிகளோ இல்லை - வெங்கடேஷ்

    "ஆரஞ்சு மிட்டாய் படத்தில் ஒரு இடத்தில கூட புகைபிடிக்கும் காட்சிகளோ மது அருந்தும் கட்சிகளோ இல்லை இதன்மூலம் ஒரு மிகச்சிறந்த திரைப்படமாக மாறியிருக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு ரசிகர்களாகிய நாம் நம் ஆதரவை அளிப்போம்" என்று மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் வெங்கடேஷ் என்னும் ரசிகர்.

    பார்வையாளர்களின் இதயத்தில் இருந்து கைதட்டல்- ஆர்த்தி

    "விஜய் சேதுபதி மீண்டும் பார்முக்குத் திரும்பி இருக்கிறார் அவர் வரும் காட்சிகளில் பார்வையாளர்களின் இதயத்தில் இருந்து அமைதியான கைதட்டல் எழுகின்றது" என்று ஆர்த்தி என்னும் ரசிகை படத்தைப் பாராட்டி இருக்கிறார்.

    விஜய் சேதுபதியின் மிகச்சிறந்த படம் - ராஜசேகர்

    "ஆரஞ்சு மிட்டாய் குறைந்த நேரமே ஓடும் ஒரு சிறந்த மற்றும் மிருதுவான திரைப்படம், படத்தில் சில உண்மையான நல்ல தருணங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதியின் கேரியரில் ஒரு மிகச்சிறந்த படமாக ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் இருக்கும்" என்று நெகிழ்ந்து இருக்கிறார் ராஜசேகர் என்னும் ரசிகர்.

    ஆத்தா டிக்கெட் கிடைச்சிருச்சு - சரத்

    கடைசியா எனக்கு டிக்கெட் கிடைச்சிருச்சு என்று சந்தோஷத்துடன் ட்வீட்டி இருக்கிறார் சரத் என்னும் ரசிகர்.

    இளைஞனுக்கும் வயதான மனிதனுக்கும் இடையேயான பிணைப்பு - ரமேஷ்

    "ஒரு வயதான மனிதனுக்கும் இளைஞனுக்கும் இடையேயான பிணைப்பை எடுத்துக் கூறும் ஆரஞ்சு மிட்டாய், 101 நிமிடங்களில் மொத்தக் கதையையும் ஷார்ட் & ஸ்வீட் ஆக விளக்கக் கூடிய ஒரு அழகான திரைப்படம்" என்று படத்தை அனுபவித்துக் கூறியிருக்கிறார் ரமேஷ் என்னும் ரசிகர்.

    அதுக்குள்ளே இண்டர்வெல்லா - கிப்டான்

    என்ன படமிது அதுக்குள்ளே இன்டர்வெல் போட்டுட்டாங்க என்று அதிர்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார் கிப்டான் என்னும் ரசிகர்.

    கதை வலுவாக இல்லை - நாகா

    படம் சலிப்பாக இருக்கிறது கதை சற்றும் வலுவாக இல்லை, சில காட்சிகள் மட்டும் அழகாக இருக்கின்றன.விஜய் சேதுபதியைத் தவிர படத்தில் வேறு ஒன்றும் பெரிதாக இல்லை " என்று மனதில் பட்டதை நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் நாகா என்னும் ரசிகர்.

    விஜய் சேதுபதியால் நிறம் மாறும் தமிழ் சினிமா - ரகுனந்த்

    "ஒரு உண்மையை கண்டிப்பாக அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும் விஜய் சேதுபதியின் வருகைக்குப் பின்னர் தமிழ் சினிமாவின் நிறம் மாறியிருக்கிறது" என்று விஜய் சேதுபதியின் முயற்சியை பாராட்டியிருக்கிறார் ரகுனந்த் என்னும் ரசிகர்.

    அப்பா ஞாபகம் வருகிறது - அன்பன்

    ஆரஞ்சு மிட்டாய் படத்தைப் பார்க்கும்போது அப்பாவின் பாக்கெட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் 25 பைசாவை எடுத்து சாப்பிட்டது ஞாபகம் வருகிறது என்று அன்பன் என்னும் ரசிகர் உருகியிருக்கிறார்.

    English summary
    Vijay Sethupathi's Orange Mittai Movie, Getting Positive Reviews in Social Medias.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X