»   »  ஒத்தவீடு... 30 நாள்.. சந்தோஷத்தில் புது இயக்குநர்!

ஒத்தவீடு... 30 நாள்.. சந்தோஷத்தில் புது இயக்குநர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு ஒரு புதுப்படம் வெளியாகி 1 வாரம் சுமாராக ஓடினாலே பெரிய சாதனை எனும் அளவுக்கு நிலைமை படுமோசம்.

பெரிய பட்ஜெட்டில் வெளியான எத்தனையோ படங்கள் ஒரு வாரத்தில் பெட்டிக்குத் திரும்பியிருக்கின்றன. சமீபத்தில் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்ட இரு படங்களுக்கு சென்னையின் பிரதான திரையரங்கில் 12 பேர்கள் கூட வராததால், ஒரு தியேட்டரில் காட்சியே ரத்து செய்யப்பட்டது.

இப்படி ஒரு சூழலில் சின்ன பட்ஜெட்டில் கிராமத்துப் பின்னணியில் வெளியான ஒரு படம் 30 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிவிஆர், சாந்தி, உதயம் என முக்கிய அரங்குகளில்.

30 நாட்களைக் கடந்த பிறகும் இந்தப் படத்துக்கு தினசரி விளம்பரம் வெளியாகிக் கொண்டிருப்பது இன்னொரு சாதனை.

கிராமத்து மக்களின் மூட நம்பிக்கை ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறிக்கும் கதையை, தஞ்சை மாவட்ட பின்னணியில் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநர் பாலன் என்கிற பாலு மலர்வண்ணன். பத்திரிகையாளர், பிஆர்ஓ என வாழ்க்கையை ஆரம்பித்து, இயக்குநராகியிருக்கும் திருத்துறைப்பூண்டிக்காரர்.

முதல் முயற்சி. சற்று அமெச்சூர்த்தனம் இருந்தாலும், தான் சொல்ல நினைத்ததை சொல்லியிருந்தார். அந்தப் படம் இத்தனை நாள் ஓடுவது பாலனுக்கு பெரிய தெம்பைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து பாலன் கூறுகையில், "கிராமத்து எளிய மனிதர்கள் மற்றும் அவர்களின் பழக்கங்களின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்தேன். ஒரு முக்கிய பாத்திரத்தில் சீமானை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது.

இந்தப் படம் இன்றுவரை பரவாயில்லை எனும் அளவுக்கு பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் பார்த்த பல அரங்குகளில் பெண்கள், இளைஞர்கள் கூட இந்தப் படத்தை ஒன்றிப்போய் பார்த்தனர். யாரும் சூப்பர் என்று சொல்லாவிட்டாலும் மோசம் என்று சொல்ல முடியாத அளவு இந்தப் படம் அமைந்துவிட்டது. கிராமம் சார்ந்த பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது என் படத்துக்கு.

இதோ இன்று 30 நாட்களைத் தாண்டிவிட்டது படம். நிச்சயம் 50வது நாளைத் தாண்டும் என நம்புகிறேன். நான் யாரிடமும் சினிமா கற்கவில்லை. சினிமா பார்த்து சினிமா எடுக்க கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தை 20 நாட்களில் எடுத்தேன். அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

ஒத்தவீடு ரிசல்ட் தந்த தெம்பில் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகிவிட்டார் பாலன்!

English summary
Pro turned film director Balan aka Balu Malarvannan's debut movie Otha Veedu crossed 30 days successfully. According to film circle it is a good run for a small budget movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos