»   »  ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர். பிரபல பின்னணி பாடகிகளான பி.சுசீலா, வாணி ஜெயராம், எம்.என்.ராஜம் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

2016 சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த அதிமுக, தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக 2 வது முறையாக ஆட்சி அமைத்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மற்றும் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வரும்போது சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

குவிந்த தொண்டர்கள்

திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் பதவியேற்பு விழாவைக் காண மெரினா கடற்கரையில் குவிந்தனர்.

சாலை எங்கும் தொண்டர்கள்

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு வாலாஜா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் சில மணிநேரம் அவதிப்பட்டனர்.

வெற்றிப் புன்னகை

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்த ஜெயலலிதா வழக்கத்துக்கு மாறாக, புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மேடைக்கு கீழே அமர்ந்திருந்த பலரையும் பார்த்து வணங்கினார்.

பாஜக, கம்யூனிஸ்ட் தலைவர்கள்

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

நாசர், விஷால், சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நடிகர் நாசர், நடிகர் விஷால், நடிகர் பிரபு ஆகியோரும் இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நடிகை ஆர்த்தி, பாத்திமா பாபு என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பி.சுசீலா, வாணி ஜெயராம், எம்.என்.ராஜன்

பிரபல பின்னணி பாடகிகளான பி.சுசீலா, வாணி ஜெயராம், எம்.என்.ராஜம் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

மதுரை ஆதினம்

மதுரை ஆதினம், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெங்கடாசலம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

தடுப்பு வேலிகள்

பதவியேற்பு விழா வைபவத்தில் வழக்கமாக இருக்கும் தோரணங்கள், பேனர்கள், கட்- அவுட்கள் என எதுவும் இல்லாமல், தடுப்பு வேலிகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actors Prabhu, Nasser, Vishal and R Sarathkumar, singers P Susheela and Vani Jayaram, industrialist A C Muthiah and Sri Ramachandra University chancellor V R Venkataachalam were the other dignitaries who attended the Jayalalitha's swearing in ceremony.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos