» 

தீபாவளிப் படங்கள் - வசூலில் ஆரம்பத்துக்கு முதலிடம்... தரத்தில் பாண்டிய நாடு நம்பர் ஒன்!

Posted by:
 

இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் வசூலில் முதலிடத்தை அஜீத்தின் ஆரம்பம் படமும், தரத்தில் முதலிடத்தை விஷாலின் பாண்டிய நாடும் பிடித்துள்ளன.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, கடைசி இடத்துக்குப் போய்விட்டது. அதுமட்டுமல்ல, கார்த்தி மற்றும் சந்தானத்துக்கு பெரிய நெருக்கடியை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பம்

ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அஜீத்துக்காகவும், ஸ்டைலான உருவாக்கத்துக்காகவும் ரசிக்கப்படும் படமாக மாறியுள்ளது ஆரம்பம். இன்னொன்று இந்தப் படம் தீபாவளிக்கு மூன்று தினங்கள் முன்பாகவே வெளியாகி, மொத்தமாக 5 நாள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளிவிட்டது. எனவே வசூல் ரீதியில் ஆரம்பத்துக்கே முதலிடம்!

பாண்டிய நாடு

விஷாலின் பாண்டிய நாடு, ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களோடும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. வசூலில் முதலிடம் ஆரம்பத்துக்கு என்றால், தரத்தில் முதலிடம் விஷாலின் பாண்டிய நாட்டுக்குதான்.

ரிப்பீட்டு

சொல்லப் போனால், ஆரம்பம் படத்தை இன்னொரு முறை பார்ப்பது கஷ்டம். ஆனால் பாண்டிய நாட்டை இரண்டாவது முறை கூட தயக்கமின்றிப் பார்க்கலாம்! விஷால் - லட்சுமி மேனன் காட்சிகள் மற்றும் பாரதி ராஜாவின் அழுத்தமான நடிப்பு படத்தை சில படிகள் உயர்த்திப் பிடிக்கின்றன.

அழகுராஜா

ஆனால் கார்த்தியின் அழகுராஜாதான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது ராஜேஷின் வழக்கமான படம். அவரது முந்தைய மூன்று படங்களில் பார்த்த அதே பாணி, நடிகர்களைத்தான் இந்தப் படத்திலும் பார்க்கிறோம். ஆனால், பார்வையாளர்கள்... குறிப்பாக விமர்சகர்கள் மனதில் ராஜேஷ் - சந்தானம் ஒரு முறையாவது கவிழ வேண்டும் என்ற நினைப்பு வந்துவிட்டது தெரிகிறது.

முதல் வார முடிவில்...

முதல் வார முடிவில், ஆரம்பம் படம் கிட்டத்தட்ட தன் அசலை வசூலித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பாண்டிய நாடும் கிட்டத்தட்ட அப்படித்தான். அழகுராஜாவும் வசூலில் தப்பித்துக் கொள்ளும் நிலை என்றாலும், இப்போதைக்கு அதை ஒரு தோல்விப் படமாக மீடியாக்கள் அறிவித்து விட்டன!

Read more about: arrambam, pandiya nadu, diwali, பாண்டிய நாடு, தீபாவளி, ஆரம்பம்
English summary
Among the three Diwali releases, Ajith's Arrambam placed in first on BO collection basis and Vishal's Pandiya Naadu got the first place on quality basis.

Tamil Photos

Go to : More Photos