twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையை கடத்தும் தீவிரவாதி நீ: ரஹ்மானை இப்படி வாழ்த்திய பார்த்திபன்

    By Siva
    |

    சென்னை: எப்பொழுதுமே மாத்தி யோசிக்கும் நடிகர் பார்த்திபன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என்று கூறி வாழ்த்தியுள்ளார்.

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர். ஃபேஸ்புக்கில் பலர் ரஹ்மானின் புகைப்படத்தை தங்களின் ஃப்ரொபைல் படமாக வைத்தனர்.

    Parthiban and his maathi yosi wish for A.R. Rahman

    இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் ஃபேஸ்புக் மூலம் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் ரஹ்மானை இசையை கடத்தும் தீவிரவாதி என்று தெரிவித்துள்ளார்.

    காத்திருக்கிறோம் -வரட்டும்னுகாத்திருக்கிறோம் ! என்ன தப்பு?விடியல் வந்ததும் Good morning சொல்ல...நான் கொஞ்சம் கூடுதல்...

    Posted by Parthiban Radhakrishnan onTuesday, 5 January 2016

    இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

    "காத்திருக்கிறோம் -வரட்டும்னு
    காத்திருக்கிறோம் ! என்ன தப்பு?
    விடியல் வந்ததும்
    Good morning சொல்ல...

    நான் கொஞ்சம் கூடுதல்.
    யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல்
    ஆளாய் அலைவேன். இன்று
    அகப்பட்டவர்
    ஆஸ்கார் ரஹ்மான்.
    பிரபஞ்சமே வியந்து
    பூமி பந்தை விரித்து
    பூங்கொத்தாய் உன்
    புகழ் கையில் வழங்கியும்
    தலை -கால்-தலை
    இடம் பெயராமல்
    காலைச்சூரியன் பட்ட
    கனகபுஷ்பராகமாய்-ஒரு
    புன்னகையை மட்டும்
    பதித்துவிட்டு அடுத்த
    பணிக்குள் விழையும்
    உன்னை நானிப்படி
    புகழ்கையில் அறிவேன்
    நீ...

    இசையை கடத்தும்
    தீவிரவாதி மட்டுமல்ல,
    இசையை கடந்தும்
    ஞானி....நீ .... என!

    என்றும் அன்பின்
    நண்பன்
    பார்த்திபன்"

    English summary
    Actor Parthiban has wished musician AR Rahman a very happy birthday on facebook in his own style.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X