»   »  "சித்தப்பு"வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா.. "சீனி"க்காக பாடிய டூயட்!

"சித்தப்பு"வுடன் ஜோடி சேர்ந்த ஓவியா.. "சீனி"க்காக பாடிய டூயட்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக வந்து ஒரு கலக்குக் கலக்கிய நடிகர் சரவணனை மறக்க முடியுமா, இன்றும் சமூக வலைதளங்களில் நீ கலக்கு சித்தப்பு என்று கமெண்டுகள் போடும் அளவிற்கு அந்தப் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் சரவணன்.

தற்போது அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகி விட்டார், ஆமாம் புதுமுக நடிகர் சஞ்சீவுடன் ஓவியா நடித்து வரும் சீனி படத்தில் ஓவியாவுடன் இணைந்து ஒரு டூயட் பாடி, ஆடி, ஓடி நடித்து இருக்கிறார் மனிதர்.

கதைப்படி சீனி படத்தில் ஓவியாவை ஒரு தலையாகக் காதலிக்கும் நபராக வரும் சரவணன், கனவில் ஓவியாவுடன் டூயட் பாடுவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்களாம் படப்பிடிப்புக் குழுவினர்.

களவாணி ஓவியா

மலையாள நடிகையான ஓவியா நடிகர் விமலின் ஜோடியாக களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். கிராமத்துக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பள்ளி செல்லும் பருவப் பெண்ணாக நடித்திருந்தார் ஓவியா.

வெற்றி நாயகியாக வலம்வந்த ஓவியா

களவாணியைத் தொடர்ந்து ஓவியா நடித்த மெரீனா, கலகலப்பு, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே போன்ற படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க கோடம்பாக்கத்தின் வெற்றி நாயகியாக வலம்வந்தவர் நடிகை ஓவியா.

அறிமுக நடிகருடன் சீனியில்

தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்து வருவதால், சஞ்சீவி என்னும் அறிமுக நடிகருடன் சீனி படத்தில் நடித்து வருகிறார் ஓவியா.

நட்சத்திரப் பட்டாளத்துடன்

அறிமுக இயக்குநர் ராஜதுரை இயக்கும் சீனி திரைப்படத்தில் ராதாரவி, சின்னி ஜெயந்த், சரவணன், செந்தில், பவர் ஸ்டார், கஞ்சா கருப்பு உள்பட ஏராளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

சரவணனுடன் டூயட் ஆடிய ஓவியா

இந்தப் படத்தில் நடிகை ஓவியாவை ஒருதலையாகக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கும் சரவணன், ஓவியாவுடன் ஒரு டூயட் ஒன்றையும் பாடி, ஆடியிருக்கிறார். இதற்காக 26 கிலோ எடையைக் குறைத்து ஓவியாவுடன் டூயட் ஆடியிருக்கிறார் சரவணன்.

சீனி படத்தின் கதை

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நாயகன் சஞ்சீவ் அரசாங்க வேலைக்குப் போகாமல், பெரிய தொழிலதிபர் ஆகும் கனவுடன் இருக்கிறான். அவன் கனவு வென்றதா, வென்றது எனில் அவனுக்கு உதவி செய்தது யார் போன்ற கேள்விகளுக்கு பதிலை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓவியாவுடன் டூயட் ஆடுவதற்காக 26 கிலோ எடையைக் குறைத்து நடித்து இருக்கிறார் சரவணன், நீ கலக்கு சித்தப்பு.... (குண்டா இருந்தாலும் பரவாயில்லை) !

 

 

English summary
Paruthiveeran Fame Saravanan, Upcoming Movie Seeni. He Is Duet With Oviya For A Dream Song.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos