»   »  குஷி 2: குஷி செண்டிமெண்டுடன் பூஜையைத் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா

குஷி 2: குஷி செண்டிமெண்டுடன் பூஜையைத் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: பவன் கல்யாண்- எஸ்.ஜே.சூர்யாவின் 'குஷி 2' திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

விஜய்-ஜோதிகா நடிப்பில் கடந்த 2௦௦௦ ல் வெளியாகி ஹிட்டடித்த படம் 'குஷி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதே படத்தை பவன் கல்யாண்-பூமிகாவை வைத்து எஸ்.ஜே.சூர்யா தெலுங்கிலும் ரீமேக் செய்து வெற்றிகண்டார்.

குஷி

விஜய்-ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்த 'குஷி' இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

பவன் கல்யாண்

இதே படத்தை பவன் கல்யாண்-பூமிகாவை வைத்து தெலுங்கு மொழியில் எஸ்.ஜே.சூர்யா ரீமேக் செய்ய அங்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சரியாக 15 வருடங்களுக்கு முன் இதேநாளில் வெளியான 'குஷி' 27 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது.

15 வருடங்கள்

'குஷி' இன்று 15 வது வருடத்தில் அடியெடுத்து வைத்ததை பவன் கல்யாண் ரசிகர்கள் #15yearsforkushi என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கிக் கொண்டாடினர். இதனால் தேசியளவில் 'குஷி' சிறிதுநேரம் ட்ரெண்டானது. இந்நிலையில் பவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 'குஷி 2' வை பூஜையுடன் இன்று எஸ்.ஜே.சூர்யா தொடங்கியிருக்கிறார்.

படப்பிடிப்பு

'சர்தார் கப்பர் சிங்'கைத் தொடர்ந்து 'குஷி 2' படத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2 ம் தேதி முதல் தொடங்குகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்

இப்படத்தின் 2 வது பாகத்தில் நடிக்க விஜய் தயங்கியதால் தான், பவன் கல்யாணை வைத்து எஸ்.ஜே.சூர்யா பூஜை போட்டிருப்பதாக கூறுகின்றனர். 'குஷி' தமிழிலிருந்து தெலுங்குக்கு சென்றதுபோல 'குஷி 2' தெலுங்கிலிருந்து தமிழுக்கு வருமோ?

English summary
Pawan Kalyan S.J.Suryah's Kushi 2 Pooja Held Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos