twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 ஆண்டுகளை கடந்த பெத்தராயுடு.. ரஜினி நினைவில் மூழ்கிய மோகன்பாபு

    By Mayura Akilan
    |

    ஹைதராபாத்: பெத்தராயுடு திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

    மோகன்பாபு, ரஜினி, பானுப்ரியா நடித்த பெத்தராயுடு திரைப்படம் தெலுங்கில் வெளியாகி 25 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு 30 பவுன் தங்கக்காப்பை அணிவித்தார் பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ்.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா நடித்த திரைப்படம் நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப்படத்தில் தந்தையாக விஜயகுமாரும் நடித்தனர். இந்தப் படம், தெலுங்கில் 'பெத்தராயுடு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இந்தப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து அதன் நினைவுகளை அசைபோட்டார் ரஜினியின் நண்பர் மோகன்பாபு.

    ரஜினியின் யோசனை

    ரஜினியின் யோசனை

    தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டபோது 'நாட்டாமை படம் நன்றாக இருக்கிறது. அதை தெலுங்கில் எடுக்கலாம்' என்று ரஜினி யோசனை தெரிவித்தார். அதுமட்டுமல்ல; பட அதிபர் ஆர்.பி.சவுத்திரிக்கு போன் செய்து, நாட்டாமை கதை உரிமையை எனக்கு வாங்கித்தந்தார் ரஜினி.

    நட்புக்காக ரஜினி

    நட்புக்காக ரஜினி

    'தெலுங்குப் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும்' என்று நான் கேட்டுக்கொண்டேன், 'சரி. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன்' என்று ரஜினி கூறினார். ஆனால் அது மிகவும் சிறிய கேரக்டர் என்று நான் தெரிவிக்கவே, அது பவர்ஃபுல் கேரக்டர் என்று கூறி ரஜினி அதில் நடித்தார்.

    வெள்ளிவிழா படம்

    வெள்ளிவிழா படம்

    பெத்தராயுடு படம் 1995 ஜுன் 15ம்தேதி திரையிடப்பட்டது. 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப்படத்தின் வெற்றி விழா, திருப்பதியில் நடந்தது. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில், பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு, அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார்.

    30 பவுன் தங்கக்காப்பு

    30 பவுன் தங்கக்காப்பு

    'பெத்தராயுடு' படத்தில் கலைநயம் மிக்க ஒரு பெரிய தங்கக்காப்பை ரஜினி அணிந்திருப்பார். அதேமாதிரியான தங்கக்காப்பை, 30 பவுனில் செய்து ரஜினிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார், மோகன்பாபு. மேடையில் இதை ரஜினியின் கையில், பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ் அணிவித்தார் என்று பழைய நினைவுகளை உற்சாகமாக பேசியுள்ளார் நடிகர் மோகன்பாபு.

    மிகச்சிறந்த நண்பர்

    மிகச்சிறந்த நண்பர்

    ரஜினி எனது நண்பர், பெத்தராயுடு படத்தில் நடித்த அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை ஆனால் சிறப்பான ஒன்றை அவருக்கு அளிக்க விரும்பினேன். அதனால்தான் தங்க காப்பு பரிசளித்தேன் என்றார் மோகன்பாபு.

    English summary
    Pedarayudu is one of the landmark films in the history of Telugu cinema. The film released on June 15, 1995, and has now completed 20 years. “My best friend Rajinikanth asked me to see the Tamil film Nattamai and I liked it. Then Rajanikanth told me that he would tell the producer to give me the rights, but asked me to deal with the producer about the money,” remembers Mohan Babu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X