»   »  ஒரு வழியா சென்சார் ஆகிடுச்சு பென்சில்... இதுவும் கொஞ்சம் விவகாரமான படம்தானோ!

ஒரு வழியா சென்சார் ஆகிடுச்சு பென்சில்... இதுவும் கொஞ்சம் விவகாரமான படம்தானோ!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஜிவி பிரகாஷ் முதல் முறையாக நடிக்க மேக்கப் போட்ட போது உருவான படம் பென்சில்.

ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா படங்கள் வெளியாகி, அவரையும் பாக்ஸ் ஆபீசில் ஒரு ஹீரோவாக்கிவிட்டன.


Pencil gets UA

இப்போது ஜிவி பிரகாஷ் செம பிஸி. இப்போது மீண்டும் பென்சிலை தூசி தட்டி, சென்சாருக்கு அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு ஏ சான்று அளித்துள்ளனர்.


அறிமுக இயக்குநர் மணி நாகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஹைஸ்கூல் பருவ ரொமான்ஸை மையமாகக் கொண்டது. கொஞ்சம் 'அப்படி இப்படி' சில காட்சிகள் வருவதால் யுஏ சான்று தந்துள்ளார்களாம். இன்னொன்று தனது படம் யு சான்றுடன் வெளியாவதில் ஜிவி பிரகாஷுக்கு விருப்பமும் இல்லையாம். ப்ளேபாய் இமேஜ்தான் தனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கும் அவருக்கு பென்சிலுக்கு யுஏ கிடைத்ததில் ஹேப்பிதானாம்.


படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்தான். பிவிஎஸ் என்ற புதிய நிறுவனத்தின் பேனரில் வெளியாகிறது.

English summary
GV Prakash Kumar's debut movie, Pencil has been censored with UA certificate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos