twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு எதிராக ட்விட்டரில் விஷமம்!

    By Shankar
    |

    திரைப்படம் வெளியான பின்னரே காலைக்காட்சி வசூலை கணக்கிட்டு ஒரு படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது தியேட்டர்காரர்கள் காலங்காலமாக கணிப்பது வழக்கம்.

    தொழில் போட்டி காரணமாக படம் வெளிவருவதற்கு முன்பே படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்களை கிளப்பி விடுவதும் உண்டு.

    மறு உத்தரவு வரும் வரை பள்ளி திறக்கப்படாது - பஞ்சாப் அரசு உத்தரவு

    ட்விட்டரில் படங்களை புரமோ பண்ணுகிறோம் என சில அறிவுஜீவிகள் ஈடுபட்டார்கள். ட்விட்டர் தொழில் நுட்பம் நீண்ட கால பயன்தராது என அந்நிறுவனமே அறிவித்தது தனிக்கதை.

    எந்த சினிமாவை வைத்து ட்விட்டர் தொழில் நுட்பம் பிரபலமானதோ அத் திரைப்படத் தொழிலுக்கு எதிரான செயலில் இப்போது ஈடுபட்டுள்ளது ட்விட்டர் குரூப்.

    36 கோடி ரூபாய்க்கு விநியோக உரிமை கொடுக்கப்பட்ட "ரெமோ", 11 கோடிக்கு வியாபாரமாகியுள்ள " றெக்க " படத்தையும் இணைத்து எந்த படத்தைப் பார்ப்பீர்கள் என நான்கு நபர்கள் கடந்த 20 நாட்களாக டுவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள்.

    தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் ரெமோவையும், வெற்றி தோல்வி என மாறி மாறிப் பார்த்து வந்த விஜய் சேதுபதி நடித்துள்ள றெக்க படத்தையும் ஒப்பிடுவதே தவறு.

    சிவகார்த்திகேயன் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்க கூடிய கதாநாயகன்.

    Poisonous campaign against Remo and Rekka movies

    விஜய் சேதுபதி கார்பரேட் இளைஞர்கள் கனவு நாயகன். தாய்மார்களுக்குப் பிடித்த நாயகன்.

    இந்த இருவருக்குமே படம் பார்க்கும் பார்வையாளர்கள் வேறு வேறு. சிவகார்த்திகேயன் படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையோர் புறநகர் சார்ந்தவர்கள். இவர்கள் 'நவீன மொபைல் உபயோகித்தாலும் ட்விட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் அல்ல', என்பதை நான் நிர்வகித்து வரும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் பேசியதிலிருந்து தெரிய வந்த உண்மை.

    இதற்கு நேர் எதிரானவர்கள் விஜய் சேதுபதி படம் பார்ப்பவர்கள் என்பதையும் அனுபவரீதியாகப் பார்த்திருக்கிறேன்.

    ஒரு படத்திற்கான வரவேற்பு ரீலீசுக்கு முன் எப்படி என்பதை அறிய தியேட்டர் மேனேஜர், அங்கு வேலை பார்க்கும் கடைநிலை ஊழியரைக் கேட்டால் புட்டுப் புட்டு வைப்பான். அந்த சர்வேக்கு முன்னால் ட்விட்டர் சர்வேயெல்லாம் செல்லுபடியாகாது.

    இப்படிப்பட்ட சர்வேக்களை திட்டமிட்டு வெளிக்கொண்டு வருபவர்கள் யார் என்பது பார்ப்பவர்களுக்கே தெரியும்.

    றெக்க, ரெமோ இரண்டுமே வெற்றி பெற வேண்டும் என விஜய் சேதுபதி விரும்புகிறார். சில அரைவேக்காட்டு பாலன்களோ 'நான் மட்டும் நான் மட்டும்' என விஷமப் பிரச்சாரத்தைக் கிளப்பி விடுவது தமிழ் சினிமாவுக்கு நல்லது இல்லை. எல்லோரும் வெற்றி பெற வேண்டும்.

    -ராமானுஜம்

    English summary
    Some outside guys those using twitter have spreading poisonous campaign against Remo and Rekka movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X